வெள்ளி, 23 ஜூன், 2017

எடப்பாடி பகுதியில் ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்! June 23, 2017




எடப்பாடி பகுதியில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் ஜிஎஸ்டி வரிவிதிப்பைக் கண்டித்து  இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான  எடப்பாடியில், விவசாயத்திற்கு அடுத்து பிரதான தொழிலாக விசைத்தறி தொழில் நடைபெற்று வருகிறது. இந்த தொழிலில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் இயங்கும் நிலையில், இதனை சார்ந்து சுமார் 50ஆயிரம்  தொழிலாளர்களும் உள்ளனர். 

இந்நிலையில் மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதித்ததைக் கண்டித்து, எடப்பாடி பகுதியிலுள்ள, அனைத்து விசைத்தறி ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள், இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.