சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் புதிய சமூக ஊடகக் கொள்கையை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அண்மைக்காலமாக நாட்டுக்கு எதிரான கருத்துக்கள் இடம்பெற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இந்தக் கருத்துக்கள் பரப்புபவரைக் கண்டறிந்து தடுப்பதற்குள் பல கோடிப்பேருக்கு அந்தக் கருத்துக்கள் பரவி விடுகின்றன. இதனால் நாட்டுக்கு எதிரான கருத்துக்கள் பரப்புவதைத் தடுக்கவும், சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக மத்திய உள்துறை அமைச்சகம், பாதுகாப்புத் துறை ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகளின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில் சமூக ஊடகங்களில் எவற்றையெல்லாம் செய்யலாம்? எவற்றைச் செய்யக் கூடாது? என்பதற்கான வழிகாட்டு நெறிகள் குறித்துப் பேசப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்த வழிகாட்டு நெறிகள் இறுதிசெய்யப்பட்டுப் புதிய சமூக சமூக ஊடகக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.