சனி, 24 ஜூன், 2017

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் உயிரோடு எரித்துக் கொலை! June 24, 2017

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் உயிரோடு எரித்துக் கொலை!


உத்தரபிரதேச மாநிலம் மொராதபாத் அருகே தன் கணவரை தானே தேர்ந்தெடுத்த பெண் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் அருகே முதபாண்டேயா பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருமணத்தின் போது கேட்கப்பட்ட வரதட்சணையை கொடுக்கவில்லை என கணவன் குடும்பத்தினர் பெண்ணை சித்திரவதை செய்துள்ளனர். இந்நிலையில், கணவன் மற்றும் கணவன் குடும்பத்தினர் அந்த பெண்ணை உயிருடன் தீவைத்து கொளுத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண்ணை தீவைத்து எரித்தது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் பற்றி மொரதாபாத் காவல் ஆய்வாளர் ஆஷிஷ் ஸ்ரீவஸ்தவா கூறும்பொழுது “இச்சம்பவம் தொடர்பாக எட்டுபேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்” என்றார். இரண்டு வருடங்களுக்கு முன்பே எரிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 வரதட்சணை கொடுமையில் பெண் ஒருவர் உயிருடன் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts:

  • Former Islamophobe - Amoud Van Doorn ACCEPTS ISLAM முஹ்ம்மது நபியை அவமதித்து திரைப்படம் எடுத்தவர் இஸ்லாத்தை ஏற்றார் (அப்துல்லாஹ் றிசாத்) இறைத்தூதர் (ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் திரைப்படம் இ… Read More
  • News Read More
  • I Love Isha(alai) Good job, ICNA Los Angeles ! =] 47 people embrace Islam in Los Angeles today."I Love Jesus because I am Muslim" banner attracted many peo… Read More
  • 969 -மியான்மரில் மியான்மரில் வளர்ந்து வரும் மத பிளவுகளை ஒரு அறிகுறியாகும், சில வணிக உரிமையாளர்கள் தங்களின் முஸ்லீம் போட்டியாளர்கள் இருந்து தங்களை வேறுபடுத்தி குறியீட… Read More
  • முபட்டி-Free English Medium முபட்டி  29/04/2013 -கல்வி  இயக்கம்  - இந்த கல்வி ஆண்டு  முதல் அணைத்து ஆரம்ப பள்ளிகளில் ஆன்கிலவலி கட்டாய கல்விகாண செயற்கை 30 /04… Read More