டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் கீழ் செயல்படும், யு.சி.எம்.எஸ் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் பயின்று வந்த தமிழக மாணவர் சரத்பிரபு மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த சரத்பிரபு என்பவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் கீழ் இயங்கி வரும் யு.சி.எம்.எஸ் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் பயின்று வந்தார். இந்நிலையில், விடுதி கழிவறையில் மர்மமான முறையில் சடலமாக கிடப்பதாக சகமாணவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மாணவர் சரத்பிரபுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தனக்குத்தானே இன்சூலின் செலுத்திக்கொண்டு மாணவர் சரத்பிரபு உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இதனை சரத்பிரபுவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். மேலும் நேற்றிரவு சரத்பிரபு சகஜமாக பேசியதாகவும், அவர் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் அவர்கள் புகார் கூறியுள்ளனர்.
கடந்த 2016ம் ஆண்டு திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரவணன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரியில் மர்மமான முறையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.