காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனை சுடவில்லை என ராஜஸ்தான் போலீசாரிடம் நாதுராம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சனிக்கிழமை நாதூரமை ராஜஸ்தான் போலீசார் குஜராத்தில் கைது செய்தனர். சிறையிலடைக்கப்பட்ட நாதுராமிடம், பாலி மாவட்ட காவல்துறை போலீஸ் விசாரணை செய்தனர்.
அதில், கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி தாமும் தனது நண்பரான தீபாரமும் பதுங்கி இருந்ததாகவும், அப்போது தாம் இருந்த வீட்டை சென்னை போலீசார், சுற்றி வளைத்ததாகவும் கூறினார். போலீசார் வந்ததை அறிந்து, அங்கிருந்து தப்பியோடியதாக கூறினார்.
ஓடும் போது யாரோ துப்பாகியால் சுடும் சத்தத்தை மட்டும் கேட்டதாகவும், ஆய்வாளர் பெரிய பாண்டியனை தாம் சுடவில்லை என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார். கொளத்தூர் நகைக் கடை கொள்ளை வழக்கில் நாதூராமை சென்னைக்கு அழைத்து வந்து தமிழக போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
பெரியபாண்டியன் சுடப்பட்டது குறித்து ஏற்கனவே கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகரிடம் தகவல்களை சென்னை போலீசார் வாங்கியுள்ளனர். இது குறித்தும் நாதூராமிடம் விசாரணை செய்ய உள்ளதாக சென்னை போலீசார் தெரிவித்தனர்.