பாரதிய ஜனதா கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை தனிப்பட்ட முறையில் எதிர்க்கவில்லை என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ராம்நாத் கோவிந்தை தனிப்பட்ட முறையில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கவில்லை என்றும், அவரது ஆளுமையை குறைகூறவில்லை என்றும் தெரிவித்தார். அதேநேரத்தில் தங்கள் கட்சி முன்னிறுத்தியுள்ள வேட்பாளரான மீரா குமார், சர்வதேச அளவில் புகழ்பெற்றவர் என்றும், மிகப்பெரிய வரலாற்று பின்புலத்தைக் கொண்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மீரா குமாரின் தந்தையான ஜகஜீவன் ராம் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களில் ஒருவர் என்றும், சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக இருந்தவர் என்றும் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். பிகாரைச் சேர்ந்தவரான மீரா குமாருக்கு ஆதரவு அளிக்குமாறு, ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு காங்கிரஸ் வேண்டுகோள் வைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மீரா குமாருக்கு ஆதரவு அளிக்க நிதிஷ் குமார் முன்வர வேண்டும் என லாலு பிரசாத் யாதவ் மீண்டும் கோரிக்கைவிடுத்துள்ளார். பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிகாரின் மகளான மீரா குமாருக்கு ஆதரவு அளிப்பதில்லை என்ற வரலாற்றுப் பிழையை நிதிஷ்குமார் மேற்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார். எனினும், இந்நிகழ்வால், பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைப்பதில் பின்னடைவு ஏற்படாது என்றும் லாலுபிரசாத் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.