106 பயணிகள் 14 ஊழியர்களுடன் சென்ற மியான்மர் ராணுவ விமானம் நேற்று நடுவானில் மாயமானது.
Myeik என்ற நகரத்தில் இருந்து yangon சென்றபோது, புறப்பட்ட 20 நிமிடத்தில் விமானம் மாயமானது.
இன்று மதியம் 1.35 மணியளவில் Dawei என்ற நகரத்தின் மீது பறந்து கொண்டிருந்த போது, விமானம் கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதனையடுத்து விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் அந்தமான் கடற்கரையோரம் விமானத்தின் பாகங்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டன.

ஒரு குழந்தை, ஒரு பெண், ஒரு ஆண் என 3 பேரின் சடலங்கள் கடலில் மிதந்ததை கண்ட அதிகாரிகள், அந்த சடலங்களை மீட்டனர்.
விமானம் சீனாவில் தயாரிப்பட்டது என்பதும் புதிய விமானம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விமானத்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினர் ஆவர்.