புதன், 12 ஜூலை, 2017

மத்திய அரசு கதி கலங்கும் அளவிலான 5 வினாக்களை தொடுக்கும் Hindustan Times நாளிதழ்...!!!

9 அப்பாவி யாத்ரீகர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் மத்திய அரசு கதி கலங்கும் அளவிலான 5 வினாக்களை தொடுக்கும் Hindustan Times நாளிதழ்...!!!
1) தாக்குதலுக்குள்ளான அந்த பேருந்து அமர்நாத் கோவில் கமிட்டியில் பதிவு செய்யப்பட்டதா? இல்லையென்றால் ஏன்?
2) பதிவு செய்யப்படாத நிலையில் அந்த பேருந்து எப்படி எளிதாக பல பாதுகாப்பு சோதனை சாவடிகளை கடந்து சென்றது?
3) வரையறுக்கப்பட்ட செயல் விதிமுறைகளை மீறி சூரிய அஸ்தமனத்திற்குப்பின் அந்த பேருந்து பயணிக்க ஏன் அனுமதி வழங்கப்பட்டது?
4) பதிவு செய்யப்படாத பேருந்தின் முன்பு காவல்துறை ரோந்து வாகனம் சென்றது ஏன்?
5) தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற பெருமளவில் வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை அழுத்தமாக எச்சரித்தும், அந்தப் பாதையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் காவல்துறை மெத்தனமாக இருந்தது ஏன்?
இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் உண்மையாக வெளிவரும்பட்சத்தில் இந்திய தேசம் நிச்சயம் அதிரும்...!!!

Related Posts: