வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

மக்களின் கவனத்தை திசை திருப்பி அரசியல் செய்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது இந்த கார்ட்டூன்.

நண்பர் சுரேந்திரா வரைந்த கார்ட்டூன் இது. இன்று மோடி குரூப் எப்படி மக்களின் கவனத்தை திசை திருப்பி அரசியல் செய்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது இந்த கார்ட்டூன்.
தை டெல்லி முதல்வர் அரவிந்த் தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்கிறார். உடனே இது அனுமனை இழிவு படுத்துகிறது.. இந்துக்களின் மனம் புண்படுகிறது.. அரவிந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வழக்கமான திசை திருப்பும் அரசியலை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
கார்ட்டூன் என்பது மக்களுக்கு எளிமையாக அரசியலை சொல்வதற்கான ஊடக வடிவம். சமயங்களில் அது மிகைப்படுத்தி வரையப்பட்டிருக்கும். ஆனால் போராளிகள் ஒரு கார்ட்டூனை அப்படியே தட்டையாக புரிந்து கொண்டால் இப்படிதான் காமெடி நடக்கும்.
வானத்தில் பறந்து வருவதால் அந்த கேரக்ட்டரை அனுமர் என கற்பனை செய்து கொண்டீர்கள் என்றால் அப்போ மோடி ராமர், அமித்ஷா லட்சுமணர்.. சீதை யார் என்று வரிசையாக கற்பனை செய்து கொண்டே போங்கள்.. உருப்படும்.
கார்ட்டூனிஸ்ட்டுகளுக்கு இனி வரும் காலம் டெரர் காலமாக இருக்கும் என நினைக்கிறேன். அதற்கான எல்லா அறிகுறிகளும் தெரிகிறது.
கார்ட்டூன் வரைய குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பீர்களா என்று நிறைய நண்பர்கள் கேட்பதால், பேசாமல் கார்ட்டூன் வரைவது எப்படி என்று ஒரு புத்தகம் போடலாம் என்று யோசித்திருந்தேன்..
ஆனால் அதற்கு முன்பு தங்கள் இஷ்டத்திற்கு கார்ட்டூனை புரிந்து கொண்டு புரளி கிளப்பிவிடும் போராளி குழந்தைகளுக்காக.. `கார்ட்டூனை புரிந்து கொள்வது எப்படி’ என்று புத்தகம் போட்டாக வேண்டும் என்று தோன்றுகிறது..
அல்லது கார்ட்டூனிஸ்ட்டுகள் துபாய்க்கு ஒட்டகம் மேய்க்க போக வேண்டும்.. frown emoticon

Related Posts: