திங்கள், 3 ஜூலை, 2017

குண்டும் குழியுமான சாலையை தானே சரி செய்யும் சிறுவன்! July 03, 2017


குண்டும் குழியுமான சாலையை தானே சரி செய்யும் சிறுவன்!


ஐதராபாத் நகரில் குண்டும் குழியுமாகக் கிடக்கும் சாலையை ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவன் தன்னால் இயன்றவரை சீரமைத்து வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

தெலங்கானா மாநிலத் தலைநகர் ஐதராபாத்தில் ஹப்சிகுடா என்னும் பகுதியில் வசிக்கும் ரவிதேஜா என்கிற சிறுவன் ஆறாம் வகுப்புப் படித்து வருகிறான். இப்பகுதியில் குண்டுங்குழியுமாகக் கிடக்கும் சாலையில் நடந்து செல்வோரும் இருசக்கர வாகனங்களில் செல்வோரும் தடுமாறி விழுவது சிறுவன் ரவிதேஜாவைப் பெரிதும் பாதித்துள்ளது. இதுபற்றிக் கவலையுற்ற அவன், தன்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும் எனத் தீர்மானித்து நேரடியாகக் களமிறங்கிவிட்டான். 

கற்களையும் மண்ணையும் அள்ளிப் பள்ளங்களில் போட்டு நிரப்பிச் சாலையைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டான். மாநகராட்சி செய்ய வேண்டிய பணியை மாணவன் ஒருவன் செய்ததைக் கண்டவர்கள் வியந்து பாராட்டிச் சென்றனர்.

Related Posts: