சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முயற்சியைக் கண்டித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் செயல்படும் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான சேலம் உருக்காலையை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையொட்டி தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தப் புள்ளியும் கோரப்பட்டுள்ளது. இவ்வாறு சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முயற்சியைக் கண்டித்து உருக்காலை தொழிலாளர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உருக்காலையின் நுழைவு வாயில் முன்பு நடைபெறும் இந்தப் போராட்டத்தில் தொமுச, ஐஎன்டியூசி, சிஐடியூ உள்ளிட்ட தொழிற் சங்க நிர்வாகிகளும், தொழிலாளர்களும் பங்கேற்றுள்ளனர்.
credit ns7.tv