திங்கள், 3 ஜூலை, 2017

நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு! July 03, 2017

நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு!


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனுக்கு ஜாமின் கோரியும், தண்டனையை ரத்து செய்யக்கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என நீதிபதி கர்ணன் சார்பில் வழக்கறிஞர் மேத்யூ நெடும்பாரா தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கெஹர் முன்பு முறையிட்டார். முறையீட்டை நிராகரித்த தலைமை நீதிபதி, கர்ணன் தொடர்பான எந்த கோரிக்கையையும் ஏற்கப்போவதில்லை என தெரிவித்தார். 

கர்ணன் வழக்கினை விசாரிக்க அரசியல் சாசன அமர்வை அமைக்க வேண்டும் எனவும் நெடும்பாரா முறையிட்டார். இந்த கோரிக்கையும் தலைமை நீதிபதி நிராகரித்தார்