பாஜக தலைவருக்கு அபராதம் விதித்து அவரது வாகனத்தை பறிமுதல் செய்த ‘பெண் சிங்கம்’ என்று அழைக்கப்பட்ட பெண் காவலர் ஷ்ரஷ்தா தாகூர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பலந்த்சாகர் மாவட்டத்தில் உள்ள சையனா வட்டத்தில் காவல் அதிகாரியாக ஷ்ரஷ்தா தாகூர் பணியாற்றிவந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஜில்லா பஞ்சாயத்துத் தலைவர் பாஜகவை சேர்ந்த ப்ரமோத் லோதி ஹெல்மெட் அணியாததால் அவருக்கு அபராதம் விதித்ததோடு அவரது வாகனத்தையும் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்காக 5 உள்ளூர் பாஜக தலைவர்களை தாகூர் சிறையில் அடைத்தார்.
கடந்தவாரம் இது தொடர்பாக 11 எம்எல்ஏக்கள் ஒரு எம்பி அடங்கிய குழு முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து இது பற்றி முறையிட்டது. அவர்கள் முறையிட்ட ஒரு வார காலத்திற்குள் ஷ்ரேஷ்தா தாகூர் ஷியானா பகுதியில் இருந்து பஹாரெய்ச் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநில காவல் துறைக்கு தேவையில்லாமல் நெருக்கடிகளை கொடுக்க வேண்டாம் என்று உத்தரபிரதேச மாநில எம்பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறியிருந்தார்.
மேலும் நல்ல நிர்வாகத்திற்கு அதிகாரிகள் பணியிட மாறுதல்கள் செய்வதை கைவிட வேண்டும் என்று மோடி கேட்டுக்கொண்டிருந்த நிலையில் ஷ்ரேஷ்தா தாகூர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.