வெள்ளி, 7 ஜூலை, 2017

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அதிரடி உத்தரவு! July 07, 2017

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அதிரடி உத்தரவு!


காவிரி ஆற்றில் கர்நாடகா கழிவுநீரை கலப்பது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழக அரசு கடந்த 2015-ம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தமிழகத்திற்கு திறந்துவிடும் காவிரி ஆற்றில் கர்நாடகா கழிவுநீரை கலந்துவிடுவதாக குற்றம்சாட்டப்பட்டது. எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கப்பட்டது. 

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபகள் பாம்டே மற்றும் நாகேஷ்வரவராவ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக இரு மாநில மாசுகாட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி மத்திய மாசு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 6 மாதத்திற்குள் விசாரணை நடத்தி மத்திய மாசு கட்டுப்பாட்டுதுறை அறிக்கை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Posts: