வியாழன், 12 ஆகஸ்ட், 2021

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் மீதான குற்றச்சாட்டுகள் என்ன?

 இ-காமர்ஸ் நிறுவனங்களான அமேசான் மற்றும் வால்மார்ட்டுக்குச் சொந்தமான பிளிப்கார்ட் நிறுவனங்களிடம் இந்திய போட்டி ஆணையம் விசாரணை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு சிசிஐ விசாரணையை ரத்து செய்யக் கோரிய நிறுவனங்களின் மனுக்களை தள்ளுபடி செய்தது. மேலும், மனுதாரர்களின் ரிட் மேல்முறையீடுகளை தள்ளுபடி செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை என தனது உத்தரவில் கூறியுள்ளது.
முன்னதாக, இரண்டு நிறுவனங்களின் போட்டி-விரோத நடைமுறைகள் குறித்து சிசிஐயின் ஆரம்ப விசாரணையில் தலையிட கர்நாடக உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்திய போட்டி ஆணையம்(சிசிஐ) விசாரணை

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுடன் பிரத்யேக விற்பனை ஒப்பந்தங்களை செய்து கொண்டு குறைந்த எண்ணிக்கையிலான விருப்ப விற்பனையாளர்கள் மூலம் குறிப்பிட்ட தொலைபேசிகளை விற்பதாக கடந்த 2019ஆம் ஆண்டு டெல்லி வியாபாரிகள் சங்கங்கள் இந்திய போட்டி ஆணையத்திடம் புகார் அளித்தன.

மேலும் இந்திய சந்தைகளுக்கான விதிகளை மீறி இந்த தளங்களில் பிரத்யேகமாக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது குறித்த பிரச்சினையையும் இது எழுப்பியது. இ-காமர்ஸ் நிறுனங்களோ, சந்தைகளோ, விற்பனையாளர்களை தங்களது தளத்தில் பிரத்தியோகமாக விற்க கட்டாயப்படுத்த முடியாது.இ-காமர்ஸ் நிறுனங்களோ, சந்தைகளோ, விற்பனையாளர்களை தங்களது தளத்தில் பிரத்தியேகமாக விற்க கட்டாயப்படுத்த முடியாது.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் சில விற்பனையாளர்களுக்கு அதிக தேடல் தரவரிசைகளை அளிப்பதன் மூலம் முன்னுரிமை அளித்துள்ளதாகவும், Flipkart இன் Big Billion Days மற்றும் Amazon’s Prime Day போன்ற முக்கிய விற்பனை காலங்களில் அத்தகைய விற்பனையாளர்கள் வழங்கும் தள்ளுபடியின் ஒரு பகுதியை செலுத்த முன்வருவதாகவும் வியாபாரிகள் சங்கம் குற்றம்சாட்டியது.

ஸ்மார்ட்போன் பிராண்டுகளுக்கும் ஆன்லைன் தளங்களுக்கும் இடையிலான ஏற்பாடுகள் ஒரு சில விற்பனையாளர்கள் சில தொலைபேசிகளை ஒரே தளத்தில் பிரத்தியேகமாக விற்க வழிவகுக்கிறது. அதோடு தளங்களுக்கும் இந்த விற்பனையாளர்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவது விசாரணைக்கு தகுதியானது என்பதால் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள இயக்குனரகத்திற்கு சிசிஐ உத்திரவிட்டிருந்தது.

(திங்கள்கிழமை, அமேசான் இந்தியா தனது கூட்டு நிறுவனமான பிரியோன் பிசினஸ் சர்வீசஸில் தனது பங்களிப்பை முடித்துக்கொள்வதாக அறிவித்தது.)

அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்கள் இந்திய போட்டி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. அதில் “விற்பனையாளர்களுக்கும் தளங்களுக்கும் இடையே எந்த உடன்பாடும் இல்லை. இந்த விவகாரத்தில் இந்திய தொழில் போட்டி ஆணையத்திடம் போதுமான ஆதாரங்கள் இல்லை. மேலும் ஸ்மார்ட்போனை ஒரு தளத்தில் பிரத்தியேகமாக விற்பது தயாரிப்பாளரின் விருப்பம்” என தெரிவித்திருந்தது.

இந்த மனுக்களை தள்ளுபடி செய்த கர்நாடக உயர்நீதிமன்றம், தகுந்த காரணங்களுக்காக உரிய முறையிலான விசாரணைக்கு இந்திய போட்டி ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான இந்த மனுக்களை ஏற்க முடியாது என கருத்து தெரிவித்தது.

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

இந்திய போட்டி ஆணையத்தின் இயக்குநர் இதுகுறித்த விசாரணையை நடத்தி விவரங்களை கமிஷனிடம் சமர்பிப்பார். கமிஷன் இறுதி உத்தரவுகளை பிறப்பிக்கும்.

இந்திய போட்டி ஆணையத்தின் தலைவர் அசோக்குமார் குப்தா இந்தியன் எக்ஸ்பிரஸிடம் அளித்த பேட்டியில், ஆன்லைன் தளங்களின் தரவரிசை கவலைக்குரியதாக மாறியுள்ளது. மேலும் விற்பனையாளர்கள் ஆன்லைன் தளங்களில் மட்டுமே விற்பனை செய்வதால் சில தளங்கள் அத்தியாவசிய தேவையாக மாறி வருகின்றன. பிரத்யேக ஒப்பந்தங்கள், அதிக தள்ளுபடி போன்றவற்றை வழங்கும் சில ஆன்லைன் தளங்கள் விற்பனையாளர்களை ஒன்றிணைக்கிறது . இதனால் போட்டி எழுகிறது என கூறினார்.

source https://tamil.indianexpress.com/explained/issues-in-antitrust-probe-against-amazon-and-flipkart-331396/