வியாழன், 12 ஆகஸ்ட், 2021

நடவடிக்கை தேவை: கி.வீரமணி

 

Dravidar Kazhagam President K Veeramani, K Veeramani, K Veeramani insists action against corrupted former ministers, former minister son have been helicopter, திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி, முன்னாள் அமைச்சரின் மகன் ஹெலிகாப்டர் வைத்திருப்பதாக தகவல், k veeramani praises finance minister ptr palanivel thiyagarajan, tamil nadu, tamil nadu politics, AIADMK, DMK

ஒரு முன்னாள் அமைச்சரின் மகன் ஹெலிகாப்டர் வைத்துள்ளதாக செய்திகள் வருகின்றன. ஊழலில் ஈடுபட்ட எந்த அமைச்சராக இருந்தாலும் அவர்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்குவதற்கான நடவடிக்கை தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.. அப்போது அவர் கூறியதாவது: “ கொரோனா வைரஸ் தொற்று 3வது அலை வருவதாக சொல்கிறார்கள். ஆனால், கிராமப்புறங்களில் பொதுமக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இன்னமும் முகக்கவசம் அணியாமல் இருக்கிறார்கள். அதனால், அதை மக்கள் இயக்கமாக மாற்றி கொரோனாவை தடுக்க அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே 3வது அலையை தடுக்க முடியும்.” என்று கூறினார்.

தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது குறித்துப் பேசிய அவர், “இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டக்கூடிய வகையில் தமிழகத்தின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார். அடுத்து வரக்கூடிய பட்ஜெட்டுக்கு இது ஒரு முன்னோடியாக அமையும். தமிழகத்தில் தற்போது அமைந்துள்ள அரசு ஒரு வெளிப்படை தன்மையோடு செயல்படுகிறது. குறிப்பாக அந்த வெள்ளை அறிக்கையில், முடிவுரை பகுதி தெளிவாக உள்ளது.. மற்ற அறிக்கைகளை விட இந்த அறிக்கையில் நிதியமைச்சரே கையெழுத்திட்டு கொடுத்துள்ளார். அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களுக்கு அனைத்தும் தானே பொறுப்பேற்பதாகவும் சொல்லி உள்ளது இந்தியாவிலேயே வேறு எங்குமே நடக்காத நிகழ்வு. புதுமை. அமைதி புரட்சி” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “கடந்த 7 ஆண்டுகளாக நடந்த தவறுகள், போதாமைகள், சட்டமன்றத்தில் ஒப்புதல் பெறாமல் செய்யப்பட்ட செலவுகள் போன்றவை இனி எக்காலத்திலும் திரும்பி வரக்கூடாது என இந்தியாவுக்கே வழிகாட்ட கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் 5 வருட காலத்தில் இதை நாங்கள் ஒழுங்குபடுத்துவோம் என்றும் நிதியமைச்சரே சொல்லி இருக்கிறார். இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய வகையில் தமிழகத்தில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட், இதற்கு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை தருவது மட்டுமல்ல, ஒரு புதுமையை புகுத்தி, மக்கள் எதற்காக வாக்களித்தார்களோ அவர்களுக்கு தேவையானவற்றை வழங்க இந்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.” என்று கூறினார்.

முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்சஒழிப்புத் துறையினர் சோதனை நடத்து குறித்துப் பேசிய கி.வீரமணி, “முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை செய்வது என்பது பழிவாங்கும் செயல் கிடையாது. அவை அனைத்துமே ஆதாரங்களோடு நடைபெற்றுள்ளதாக தெரிகிறது.. அதேமாதிரி ஒரு முன்னாள் அமைச்சரின் மகன் ஹெலிகாப்டர் வைத்துள்ளதாக செய்திகள் வருகின்றன. ஊழலில் ஈடுபட்ட எந்த அமைச்சராக இருந்தாலும், அவர்களை சோதனை செய்வதோடு அதற்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, விசாரணை நடத்தி, அந்த சொத்துக்கள் உள்நாட்டில் இருந்தாலும், வெளிநாடுகளில் இருந்தாலும் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்க வேண்டும். அதற்காக அவர்களுக்கு சிறை தண்டனையே அளிக்கப்பட்டாலும் சரி அந்த சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்” என்று கூறினார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை இன்னும் போலீஸ் அதிகாரியாகவே இருக்கிறார். ஒரு பொறுப்பான கட்சியின் தலைவராக இன்னும் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. அது அவரது பேச்சுக்களிலிருந்து தமிழக மக்கள் உணர்ந்து கொள்ள முடிகிறது” என்று கூறியுள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, முன்னாள் அமைச்சரின் மகன் ஹெலிகாப்டர் வைத்திருப்பதாக செய்திகள் வருகிறது. ஊழல் செய்தவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட வேண்டும் என்று கூறியிருப்பது தமிழக அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது. மேலும், எந்த முன்னாள் அமைச்சரின் மகன் ஹெலிகாப்டர் வைத்திருக்கிறார் என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளன.

source https://tamil.indianexpress.com/tamilnadu/dravidar-kazhagam-president-k-veeramani-insists-action-against-former-minister-son-have-helicopter-331467/