ராவ் பகதூர் ரெட்டமலை சீனிவாசன் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“ஒடுக்கப்பட்டோரின் உரிமைப் போராளி ரெட்டமலை சீனிவாசனார் அவர்கள் சுமார் ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்னர் பிறந்தவர். சாதி இறுக்கம் நிறைந்த அக்காலத்தில் தீண்டமையை எதிர்த்துக் களமாடியவர். குறிப்பாக, 1891இல் ஆதிதிராவிடர் மகாஜன சபையை உருவாக்கி பறையர்குல மக்களை அமைப்பாக்கியவர். பறையன் என்னும் பெயரிலேயே இதழ் ஒன்றை நடத்தி சமூக, அரசியல் விழிப்புணர்வை ஊட்டியவர். அப்போது சட்டமேலவை உறுப்பினராகப் (எம்.எல்.சி ) பொறுப்பேற்று, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்குக் குரலெழுப்பியவர்.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுடன் 1930, 1931, 1932 ஆகிய ஆண்டுகளில் இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாடுகளில் பங்கேற்று வாதாடியவர்.
குறிப்பாக, தீண்டாமை கொடுமைகளுக்குள்ளான மக்கள் யாவருக்கும் அரசியலதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று " இரட்டை வாக்குரிமையுடன்கூடிய தனிவாக்காளர் தொகுதி" கேட்டு உரத்து முழங்கியவர். அக்கோரிக்கையை வென்றெடுத்தாலும், அப்போது காந்தியடிகள் எரவாடா சிறையில் நடத்திய உண்ணாநிலைப் போராட்டத்தின் மூலம்- செப்டம்பர் 24, 1932 அன்று- உருவான பூனா ஒப்பந்தத்தால் அதனைப் பறிகொடுக்கும் நிலை உருவானது.
ஒடுக்கப்பட்டோருக்காக இவர் ஆற்றிய பணிகளைப் பாராட்டி அன்றைய ஆங்கிலேய அரசு, இவருக்கு 'இராவ் பகதூர்' , 'இராவ் சாகிப்', 'திவான்பகதூர்' ஆகிய பட்டங்களை வழங்கிச் சிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
மீண்டும் இம்மண்ணில் மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் சாதியவாத, வகுப்புவாத சக்திகள், ஆட்சியதிகார பீடத்தில் அமர்ந்து கொட்டமடிக்கும் இக்காலச்சூழலில், அனைத்துச் சனநாயகச் சக்திகளை ஒருங்கிணைக்கவும்- அவர் வழியில், தலித்துகள், பழங்குடிகள், மகளிர், சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து விளிம்புநிலை மக்களின் சனநாயக உரிமைகளையும் வென்றெடுக்கவும் அவரது பிறந்தநாளில் உறுதியேற்போம்.”
இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தான்வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.