வெள்ளி, 7 ஜூலை, 2017

கள்ளச்சந்தையில் கொடிகட்டி பறக்கும் மது விற்பனை! July 07, 2017

கள்ளச்சந்தையில் கொடிகட்டி பறக்கும் மது விற்பனை!


கொடைக்கானலில் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு தேடி வந்து மதுவிற்பனை செய்துவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தமிழகத்தில் மதுவுக்கு எதிராக போராட்டம் வலுத்துவரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கள்ள சந்தையில் மதுவிற்பனை அதிகரித்துள்ளது. அனுமதியின்றி சாலையோரங்களிலும், பாலங்களின் அடியிலும் மது விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. 


இருசக்கர வாகனங்களில் வீடுதேடி வந்து அதிகாலையில் இருந்து மதுவிற்பனை செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து கள்ளச்சந்தையில் மதுவிற்பனை செய்த  3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . 

Related Posts: