சனி, 8 ஜூலை, 2017

டெலிபதி மூலம் மனிதர்கள் தொடர்பு கொள்ள உதவும் நவீன தொப்பி! July 08, 2017

டெலிபதி மூலம் மனிதர்கள் தொடர்பு கொள்ள உதவும் நவீன தொப்பி!


டெலிபதி மூலம் மனிதர்கள் தொடர்பு கொள்ளக்கூடிய நவீன வகை தொப்பி ஒன்றை அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர்கள் தயாரித்து வருகின்றனர். 

நவீன டெலிபதி தொப்பியில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தின் மூலம் சக மனிதர் என்ன நினைக்கிறார் என்பதை துல்லியமாக உணர முடியும் என கூறப்படுகிறது. எல்.சி.டி மற்றும் இன்ஃப்ரா ரெட் தொழில்நுட்பத்தை கொண்டு இந்த நவீன வகை தொப்பி உருவாக்கப்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது இதை பயன்படுத்தி ஒரு மனிதரின் உடல் உறுப்புகளையும் கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது. இதனால் நோய்களை எளிதில் கணடறியலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களின் முன்னாள் எக்சிகியூட்டிவ் மேரி லூ ஜெப்செனின் நிறுவனம் இந்த தொப்பியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. 8 ஆண்டுகளில் இப்பணிகள் நிறைவடையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதன் மூலம், ஒருவர் பேசாமலேயே அவர் எண்ண நினைக்கிறார் என்பதை எதிரே இருப்பவர் உணர முடியும்.

100க்கும் மேற்பட்ட பொருட்களின் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமைப் பெற்றுள்ள மேரி லூ ஜெப்சென், 2016ம் ஆண்டு பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து விலகி, Openwater எனும் நிறுவனத்தை தொடங்கினார். 

Related Posts: