சனி, 8 ஜூலை, 2017

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து முழுஅடைப்பு போராட்டம்! July 08, 2017

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து முழுஅடைப்பு போராட்டம்!


புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில், துணை நிலை ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து முழுஅடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

புதுச்சேரியில் 3 நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில், முதலமைச்சர் நாராயணசாமிக்கும், துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்த விவகாரத்தில், கிரண்பேடியை கண்டித்தும், புதுச்சேரியை விட்டு அவர் வெளியேற வலியுறுத்தியும் திமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பாக முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

முழு அடைப்பு போராட்டத்துக்கு பஸ் உரிமையாளர்கள், தனியார் பள்ளிகள், ஆட்டோ டெம்போ உரிமையாளர்கள், தொழிலாளர்கள் சங்கம், திரையரங்கு தரப்பினர், மார்க்கெட் வியாபாரிகள், வர்த்தக நிறுவனத்தினர், தொழிற்சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பஸ், ஆட்டோக்கள் இயங்கவில்லை. இந்த போராட்டத்திற்கு ஆளும் காங்கிரஸ் அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனையொட்டி, புதுச்சேரியில் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் மாங்கனி திருவிழா நடைபெறுவதால், வரும் 11-ந் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts: