சனி, 8 ஜூலை, 2017

இந்து மக்கள் கட்சியினர் குடித்துவிட்டு தொந்தரவு: மக்கள் வாக்குவாதம் July 08, 2017

சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இந்து மக்கள் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் மற்றும் மாநில பொதுச்செயலாளர் ராமரவிக்குமார் உள்ளிடடோர் கலந்துக்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு குடியிருக்கும் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

மேலும் கட்சி அலுவலகம் என்ற பெயரில் சிலர் குடித்துவிட்டு தொந்தரவு செய்து வருவதாகவும் அந்த குடியிருப்பு வாசிகள் புகார் தெரிவித்துள்ளனர். 

Related Posts: