சென்னையில் பொதுப் போக்குவரத்தை உயர்த்துவதற்காகவும், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் மோனோ ரயில் தடம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இன்று சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை கொள்கை விளக்கக்குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக ரூபாய் 6 ஆயிரத்து 4025 கோடி மதிப்பீட்டில், இருவழித்தடங்களில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போரூர்-கத்திப்பாரா, போரூர்-வடபழனி இடையேயான 20.68 கிலோமீட்டர் தூரத்திற்கு 3,267 கோடி திட்ட மதிப்பீட்டில் முதல்வழித்தடமும், வண்டலூர் முதல் வேளச்சேரி இடையேயான 22.80 கிலோமீட்டர் தூரத்திற்கு 3,135 கோடி மதிப்பீட்டில் இரண்டாவது வழித்தடமும் அமைக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மோனோரயில் திட்டம் செயல்படுத்தும் அறிவிப்பு வெளியாவது 4 வது முறையாகும். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டமான மோனோ ரயில் திட்டம் பற்றிய அறிவிப்பு முதன் முதலில் 2006ம் ஆண்டு வெளியிடப்பட்டது. சட்டப்பேரவையில் ஜெயலலிதா அந்த அறிவிப்பில் மொத்தம் 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு 18 வழித்தடங்களில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்திருந்தது. 2006ம் ஆண்டு வரை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்ற நிலையில் திட்டம் தொடங்கப்படாமலே முடிவுக்கு வந்தது.
அதன் பிறகு திமுக ஆட்சிக்கு வந்து மோனோ ரயில் திட்டத்திற்கு பதிலாக மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டு, 2009ல் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்கப்பெற்று, செயல்படுத்தப்பட்டு 2015ம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
2011ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திமுக தோல்வியடைந்து அதிமுக அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. அந்த ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் மீண்டும் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தும் அறிவிப்பை ஜெயலலிதா வெளியிட்டார். அதன்பிறகு திட்டம் கிடப்பில் போடப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு 2016 ஆகஸ்டு மாதத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று வெளியான அதே திட்டத்தை வெளியிட்டார்.
அதன் பின் ஜெயலலிதா உயிரிழந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்றுவரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மீண்டும் மோனோரயில் திட்டம் குறித்த அறிவிப்பு நான்காவது முறையாக வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.