தாமிரபரணி ஆற்றில் இருந்து பன்னாட்டு குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்தாவிட்டால், போராட்டம் நடத்தப்படும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார். தஞ்சாவூர், கதிராமங்கலத்தில் போராடி கைது செய்யப்பட்ட பொதுமக்களை விடுவிக்க வேண்டும் என்றும், அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி கதிராமங்கலம் கிராமத்தை நோக்கி அனைத்து கட்சி தலைவர்களும் இன்று பயணம் மேற்கொள்கிறார்கள் என்றும் அவர் கூறினார். தாமிரபரணி ஆற்றில் இருந்து பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்றும், ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.