திங்கள், 10 ஜூலை, 2017

120 மில்லியன் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக்? July 10, 2017

120 மில்லியன் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக்?


120 மில்லியன் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இலவச 4ஜி டேட்டா சேவை, அன் லிமிட்டட் கால்ஸ் என பல்வேறு சலுகைகளை, வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் அள்ளி வழங்கி வருகிறது. இதனால் ஜியோவுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. 

இந்நிலையில், ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாடிக்கையாளரின் பெயர், மெயில் ஐ.டி, மொபைல் எண், சிம் கார்டு ஆக்டிவேட் ஆன தேதி, ஆதார் எண், உள்ளிட்ட தகவல்கள் லீக் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தகவலை ஜியோ நிறுவனம் மறுத்துள்ளது. மேலும் தங்களது வாடிக்கையாளர்களின் தகவல் அதிக பாதுகாப்புடன் பராமரிக்கப்படுவதாக ஜியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனையானவற்றிற்கு மட்டுமே டேட்டா பகிரப்பட்டதாக தெரிவித்த அதிகாரிகள், இதுகுறித்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தன்.

Related Posts: