மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பழைய நோட்டுகளில் இருந்து புதிய பொருட்களை உருவாக்கும் முயற்சியில் குஜராத் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். தேசிய வடிவமைப்பு நிறுவனத்திடம் ரிசர்வ் வங்கி இதற்கான திட்டத்தை ஒப்படைத்துள்ளது.
சுமார் 200 கிலோ, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவற்றை மறுசுழற்சி செய்து என்னென்ன பொருட்களை உருவாக்க முடியும் என மாணவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் இது தொடர்பாக தேசிய அளவிலான போட்டியையும் நடத்த இருப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
பதிவு செய்த நாள் : April 27, 2017 - 02:47 PM