புதன், 12 ஜூலை, 2017

பிரதமர் நரேந்திர மோடியால் நின்ற திருமணம்! July 12, 2017




உத்தரப்பிரதேசத்தில் நடக்கவிருந்த திருமணம் ஒன்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது, இதற்கு பிரதமர் நரேந்திர மோடியே காரணம் எனவும் கூறப்படுகிறது. 

உத்தரப்பிரதேசத்தில் அரசு வேலை செய்யும் பெண் ஒருவரை, தொழிலதிபர் ஒருவர் திருமணம் செய்ய இருந்தார். திருமணத்திற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைப்பெற்று வந்தன. இந்நிலையில் இருவரும் இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி குறித்து பேசியுள்ளனர். 

அப்பொழுது இந்தியாவின் பொருளாதார மந்த நிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி தான் காரணம் என மணப்பெண் கருத்து தெரிவித்துள்ளார், ஆனால் தொழிலதிபரான மண மகனோ மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். 

முதலில் சாதரணமாக ஆரம்பித்த உரையாடல் இருவருக்கும் இடையே பெரிதாகவே அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் அதிகரித்துள்ளது. மேலும் மணப்பெண் பிரதமர் மோடிக்கு எதிராக வலுவான கருத்துக்கள் கூறவே கடுப்பான மணமகன் அவருடைய பெற்றோரிடம் கூறி திருமணத்தை நிறுத்திவிட்டார். 

திருமணம் நிறுத்தப்பட்டது குறித்து மணப் பெண் எந்த சோகமோ வருத்தமோ இல்லாமல் மாறுபட்ட கருத்து கொண்டவருடன் வாழ்வது கடினம் எனக் கூறி திருமணம் நிறுத்தப்பட்டது குறித்து கருத்து தெரிவித்தார்.