புதன், 26 ஜூலை, 2017

தலித்களுக்கு எதிராக திண்ணைப் பிரச்சாரம் செய்கிறது பாமக!” : திருமாவளவன் July 26, 2017

“தலித்களுக்கு எதிராக திண்ணைப் பிரச்சாரம் செய்கிறது பாமக!” : திருமாவளவன்


தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளை பாமக கட்டவிழ்த்து விட்டு வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கடந்த 23-ம் தேதி நடந்த மோதலில் வெங்கடேசன் என்பவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து வெங்கடேசனின் உடலுக்கு விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு மாத காலத்தில் 3 தலித் இளைஞர்கள் தமிழகத்தில் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். 

தமிழகத்தில் பாமகதான் தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகளை செய்து வருவதுடன், திண்ணைப் பிரச்சாரமும் மேற்கொள்கிறது என திருமாவளவன் புகார் தெரிவித்துள்ளார்.

Related Posts: