புதன், 26 ஜூலை, 2017

ஆற்றை ஓடையாக மாற்றிவிட்டதாக ஓபிஎஸ் மீது பொதுமக்கள் புகார்! July 26, 2017




கிணற்றை பொதுமக்களுக்கு கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து ஓபிஎஸ் ஏமாற்றியதாக குற்றம்சாட்டி லட்சுமிபுரம் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சொந்தமான நிலத்தில் வெட்டப்பட்ட ராட்சத கிணறால் கிராம மக்களுக்கு நீராதாரம் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து கிணற்றை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவதாக ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கடந்த 12ம் தேதியே கிணற்றை அவரது ஆதரவாளருக்கு ஓபிஎஸ் விற்றுவிட்டார். மேலும்  கிணறு இருக்கும் வரட்டாறு பகுதியை ஆறு என்று குறிப்பிடாமல் ஓடை என்று மாற்றம் செய்ய ஓபிஎஸ் முயற்சித்ததாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே ஓபிஎஸ்ஸின் செயலை கண்டித்தும், இதற்கு துணை போகும் அதிகாரிகளுக்கு எதிராகவும் அப்பகுதி மக்கள் தொடர்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.