புதன், 26 ஜூலை, 2017

திம்பம் மலைப்பாதையில் சிதறும் பொருட்களை யாரும் எடுக்கக்கூடாது!" : வனத்துறை July 26, 2017




சிறுத்தை தாக்கும் அபாயம் உள்ளதால், திம்பம் மலைப்பாதையில் விபத்துக்களின்போது சிதறும் பொருட்களை யாரும் எடுக்கக்கூடாது என வனத்துறை எச்சரித்துள்ளது. 

தமிழகம்- கர்நாடகத்தை இணைக்கும்  திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதில் வாகனங்களில் இருந்து சிதறும் இரும்பு உள்ளிட்ட பொருட்களை சேகரிப்பதற்காக பலர், வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைகின்றனர். அவர்களை சிறுத்தைகள் தாக்கும் அபாயம் இருப்பதாக வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். 

ஆனால் எச்சரிக்கையும் மீறி, சமீபத்தில், விபத்தில் சிக்கிய லாரியிலிருந்து சிதறிய இரும்புப் பொருட்களை சேகரிக்கச் சென்ற லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியோரை சிறுத்தை அடித்துக் கொன்றது. 

இந்நிலையில், மீண்டும் வனப்பகுதியில் சிதறிக் கிடக்கும் இரும்பு மற்றும் அலுமினிய பொருட்களை சேகரிப்பதற்காக சிலர் களமிறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என வனத்துறையினர் மீண்டும் எச்சரித்துள்ளனர்.