பசுப் பாதுகாப்பு தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பாணை தற்போது நடைமுறையில் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில், இதனை தெரிவித்துள்ளார். பசுக்கள் முறைகேடாக விற்கப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்படுவதைத் தடுக்கும் நோக்கில், கடந்த மே மாதம் 23ம் தேதி மத்திய அரசு அறிவிப்பாணை ஒன்றை பிறப்பித்ததாக அவர் கூறியுள்ளார்.
எனினும், இந்த அறிவிப்பாணைக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்ததையும், இதனை, உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியிருப்பதையும் அமைச்சர் தனது பதிலில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஹர்ஷ் வர்தன், மத்திய அரசின் அறிவிப்பாணை நடைமுறையில் இல்லை என தெரிவித்தார். மேலும், இந்த அறிவிப்பாணைக்கு எதிரான தங்கள் கருத்துக்களை பல்வேறு மாநில முதலமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசின் கவனதுக்குக் கொண்டு வந்திருப்பதாகவும் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.