2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்தியுள்ள ரிசர்வ் வங்கி, 200 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பணப்புழக்கத்தில் 86 சதவீதம் ஆதிக்கம் செலுத்தும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவித்தார். இதையடுத்து நாடு முழுவதும் பெரும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அவதியுற்றனர். இந்நிலையில், புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது. இதில் 2000 ரூபாய் நோட்டுகள் அதிகம் புழக்கத்தில் விடப்பட்டத்தால் மக்களிடம் சில்லறை தட்டுபாடு ஏற்பட்டது.
இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை 5 மாதங்களுக்கு முன்பே ரிசர்வ் பேங்க் நிறுத்தியது. அதற்கு பதிலாக 200 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணிகள் மிக தீவிரமாக நடந்துவருகிறது. அடுத்த மாதத்திற்குள் 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ’பணமதிப்பிழப்பு நடிவடிக்கை மூலம் 630 கோடி எண்ணிக்கையிலான 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 63 லட்சம் கோடி ரூபாயாகும். இதை ஈடுசெய்கின்ற வகையில் இதுவரை 370 கோடி எண்ணிக்கையிலான 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 7.4 லட்சம் கோடி ரூபாயாகும். எனவே முன்பு இருந்த 1000 ரூபாய் நோட்டுக்களின் மதிப்பைவிட அதிக மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது.” என தெரிவித்தார்.
எனவே அதிமான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்கும் சூழலில் அதற்கு ஈடுசெய்யும் வகையில் குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பதில் ரிசர்வ் வங்கி கவனம் செலுத்துவருவதாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், ‘2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படுகிறதா என்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு நிதியமைச்சர் அருண்ஜெட்லி பதிலளிக்க மறுத்துள்ளார். இதையடுத்து மீண்டும் ஒரு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளலாம் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.