02 08 2021
கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள சர்ச்சில் பாதிரியாராக பணிபுரிந்தவர் ராபின் வடக்குஞ்சேரி. 2016ஆண்டு மே மாதம் 16 வயது சிறுமி ஒருவர் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடித்துவிட்டு டேட்டா என்ட்ரி வேலைக்காக சர்ச்சுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பாதிரியாராக இருந்த ராபின் வடக்கம்சேரி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அங்கு நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் மிரட்டியுள்ளார். அதனால் அந்த சிறுமி நடந்த சம்பவம் பற்றி யாருடமும் எதுவும் கூறாமல் இருந்துள்ளார்.
பின்னர் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கண்ணூர் மாவட்டம் கூத்துபரம்பா எனும் இடத்தில் உள்ள Christu Raja மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போதுதான் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. பிறகு சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இது பாதிரியாருக்கு தெரியவர மருத்துவமனை சிகிச்சை கட்டணம் ரூ.30,000 செலுத்த முன் வந்துள்ளார். இந்த விஷயத்தை மூடிமறைக்க தொடர்ச்சியாக பல முயற்சிகள் நடந்த பிறகு, வடகுஞ்சேரி பிப்ரவரி 2017 இல் கொச்சியில் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டது. பாலியல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால் 2020ஆம் ஆண்டு ராபின் வடக்கன்சேரியை திருச்சபையின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கத்தோலிக்க மதத் தலைவர் போப் பிரான்சிஸ் நீக்கினார்.
இந்நிலையில் முன்னாள் கத்தோலிக்க பாதிரியார் ராபின் வடக்கும்சேரி தான் பாலியல் பலாத்காரம் செய்த பெண்ணை திருமணம் செய்ய, இடைக்கால ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் கேரள உயர்நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணும் குற்றவாளி ராபினை திருணம் செய்ய அனுமதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/india/supreme-court-declines-ex-catholic-priests-plea-for-interim-bail-marry-minor-328429/