சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் அனைத்து கட்சி ஹுரியத் மாநாட்டின் 2 பிரிவுகளுக்கும் தடை விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக ஞாயிற்றுக்கிழமை அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த தடை ஹுரியத்துடன் தொடர்புடைய எந்தவொரு அலுவலக பணியாளரையும் கைது செய்ய பாதுகாப்பு அமைப்புகளுக்கு அனுமதி அளிப்பதோடு நிதி விவகாரங்களையும் தடுக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆதாரங்களின்படி, ஹுரியத்தின் கடும்போக்கு மற்றும் மிதவாத பிரிவுகளை சட்டவிரோத சங்கம் என்று அறிவிப்பதற்கான விவாதங்கள் தொடங்கினாலும், இது தொடர்பான கோப்பு நகர்வுகள் இன்னும் தொடங்கவில்லை. தற்போது கடும்போக்குவாத பிரிவுக்கு அஷ்ரப் செஹ்ராய் தலைமையில் உள்ளது. மிதவாத பிரிவு மிர்வைஸ் உமர் ஃபாரூக்கின் தலைஐயில் உள்ளது.
ஜம்மு – காஷ்மீர் காவல்துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்க இயக்குநரகம் போன்ற மத்திய நிறுவனங்களால் வழங்கப்படும் சான்றுகள் மற்றும் உளவுத்துறைகளை பின்பற்றுகின்றன வட்டாரங்கள் தெரிவித்தன. அரசின் மிக உயர் மட்டத்தில் மட்டுமே இறுதி அழைப்பு எடுக்கப்படும் என்று ஒரு வட்டாரம் தெரிவிக்கிறது.
ஒரு நிறுவனத்தை தடை செய்வதற்கான முடிவெடுப்பதற்கும், இத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை விவரிக்கும் ஒரு விரிவான அறிக்கையின் அடிப்படையில் அமைந்த கோப்பில் மத்திய உள்துறை செயலாளரால் கையெழுத்திடப்பட்டுள்ளது. இது பின்னர் அதிகாரப்பூர்வ அரசிதழில் அறிவிக்கப்பட்டது.
பள்ளத்தாக்கில் பிரச்சனைகளைத் தூண்டுவோர் இடைவிடாத அழுத்தத்தில் இருக்க வேண்டும் என்பதில் அரசு தெளிவாக இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன. யூனியன் பிரதேசத்தில் ‘பிரிவினைவாத’ மனநிலை கொண்ட அரசு ஊழியர்களை நீக்குவது மற்றும் கல் எறிபவர்களுக்கு பாஸ்போர்ட் அல்லது அரசு வேலைக்கான பாதுகாப்பு அனுமதி மறுப்பது போன்றவை இந்த யோசனைகளின் வரிசையில் உள்ளது. “ஹுரியத்கூட பாகிஸ்தானில் இருந்து ஏதாவது செய்ய அழுத்தம் கொடுக்கிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்” என்று ஒரு மூத்த அரசாங்க அதிகாரி கூறினார்.
இருப்பினும், பாதுகாப்பு நிறுவனத்தின் சில பகுதிகள் வரவிருக்கும் நகர்வு ஏற்கெனவே முடிவெடுக்கப்பட்ட இந்த நகர்வை அப்படியே பேச்சில் வைத்திருப்பது என்று கூறப்படுகிறது. “ஹுரியத் தலைவர்கள் டெல்லியில் சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து, ஹுரியத் நடைமுறையில் செயல்படவில்லை. அவர்களின் பத்திரிகை வெளியீடுகள் கூட பாகிஸ்தானிலிருந்து வெளியிடப்படுகின்றன” என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பாதுகாப்பு முகமை அதிகாரி கூறினார்.
பாகிஸ்தான் எம்பிபிஎஸ் சீட் மோசடியில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜம்மு – காஷ்மீர் போலீஸ் பிராஸ் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் சந்திப்புக்குப் பிறகு விவாதங்கள் வேகமடைந்தன. ஜம்மு – காஷ்மீர் காவல்துறையின் விசாரணையில், ஹுரியத் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் விற்கப்பட்டு அந்த பணம் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கு செல்கிறது. அந்த சந்திப்பின்போதும், ஹுரியத் மீதான தடை குறித்து விவாதிக்கப்பட்டது. இது தொடர்பான அறிக்கை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் 2019 இல், 370 வது பிரிவு திருத்தப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரிவினைவாதிகளின் பயங்கரவாத மையப் பகுதியைத் தாக்க தனது அரசாங்கம் தயராக இருப்பதாகக் கூறினார். நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சராக அவர் அளித்த முதல் பதிலில், அரசாங்கம் பயங்கரவாதத்தை சிறிதுகூட சகித்துக்கொள்ளாது என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார். பயங்கரவாதம் வேரோடு அழைக்கப்படும் என்று கூறினார்.
பிரிவினைவாத தலைவர் மிர்வைஸ் உமர் பரூக் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்டபோது, அமித்ஷா நேரடியான கேள்விக்கு பதிலளிக்கவில்லை: “அவர்கள் (காஷ்மீரில்) மனதில் இந்திய எதிர்ப்பு எண்ணங்கள் உள்ளவர்கள். அது எங்களை அச்சப்படுத்துகிறது. நாங்கள் துண்டுதுண்டாக வெட்டுகிற கும்பலின் உறுப்பினர்கள் அல்ல” என்று அவர் கூறினார்.
ஹுரியத் மாநாடு 1993ல் 26 குழுக்களுடன், சில பாகிஸ்தான் சார்பு மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி, ஜே.கே.எல்.எஃப் மற்றும் துக்தரன்-இ-மில்லத் போன்ற தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடங்கப்பட்டது. மிர்வைஸ் உமர் பாரூக் தலைமையிலான மக்கள் மாநாடு மற்றும் அவாமி நடவடிக்கை குழுவும் இதில் அடங்கும்.
மிர்வைஸ் தலைமையிலான மிதவாத குழு மற்றும் சையது அலி ஷா கிலானி தலைமையிலான தெஹ்ரீக்-இ-ஹுரியத் ஆகியவற்றுடன் பிரிவினைவாத கூட்டமைப்பு 2005 ல் இரண்டு பிரிவுகளாக உடைந்தது.
2019 ஆம் ஆண்டில், அரசாங்கம் ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் ஜே.கே.எல்.எஃப்-ஐ அமைப்புகளை உபா சட்டத்தின் கீழ் தடை செய்தது. இது வரை, பயங்கரவாத நிதியுதவி வழக்கில் காஷ்மீரைச் சேர்ந்த ஹுரியத் தலைவர்கள் உள்பட 18 பிரிவினைவாத தலைவர்களை என்ஐஏ கைது செய்துள்ளது. பிப்ரவரி 2018 இல், லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவர் சையது சலாவுதீன் உட்பட 12 பேர் மீது என்.ஐ.ஏ நிறுவனம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ-வால் கைது செய்யப்பட்ட 10 பேரில் ஜீலானியின் மருமகன் அல்தாஃப் அகமது ஷா மற்றும் காஷ்மீர் தொழிலதிபர் ஜஹூர் வாதாலி ஆகியோர் அடங்குவர்.
பிப்ரவரி 2019ல், மிர்வைஸ் வீடு மற்றும் ஜே.கே.எல்.எஃப் தலைவர் யாசின் மாலிக், ஜே.கே.டி.எஃப்.பி தலைவர் ஷபீர் ஷா, தெஹ்ரீக்-இ-ஹுரியத் தலைவர் முகமது அஷ்ரப் கான், அனைத்து கட்சி ஹுரியத் மாநாட்டின் பொதுச் செயலாளர் மசரத் ஆலம், ஜே.கே.எஸ்.எம் தலைவர் ஜாபர் அக்பர் பட், ஹுரியத் தலிஅவர் சயீட் அலி ஷா, ஜீலானியின் மகன் நசீம் ஜீலானி ஆகியோரின் வீடுகளில் என்.ஐ.ஏ சோதனை நடத்தியது. பின்னர் துக்தரன்-இ-மில்லத் தலைவர் ஆசியா ஆண்ட்ரபியுடன் மாலிக் மற்றும் ஆலம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
என்.ஐ.ஏ தனது குற்றப்பத்திரிகையில் பாகிஸ்தான் கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் பொறியியல் இடங்களை ஒதுக்குவது காஷ்மீரில் உள்ள இந்திய எதிர்ப்பு சக்திகளுக்கு ஊட்டமளிக்கும் ஒரு பெரிய மோசடி என்று கூறியுள்ளது.
பாகிஸ்தான் கல்லூரிகளில் உள்ள ஹுரியத் தலைவர்கள் மூலம் மாணவர்களை பரிந்துரைக்கும் முறை இந்தியாவை சீர்குலைக்கும் பாகிஸ்தானின் முயற்சிகளுக்கு உதவியதாக என்ஐஏ கூறியுள்ளது.
“பயங்கரவாதிகள், ஹுரியத் மற்றும் பாகிஸ்தான் நிறுவனம் ஆகிய மூன்று முக்கோண உறவுகளை இது காட்டுகிறது. மேலும் அவர்கள் காஷ்மீரில் ஒரு தலைமுறை மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை பாகிஸ்தானை நோக்கி சாய்ப்பதற்கு தயாராக உள்ளனர்.” என்று என்ஐஏ தனது குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/govt-considers-ban-on-both-factions-of-hurriyat-final-call-335004/