செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை வானிலை மையம் தகவல்

 கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடந்த மூன்று தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிடுகிறது

வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை ஏற்பட வாய்ப்புள்ளது. வங்கக் கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்குக் கடலுக்குச் செல்வது பாதுகாப்பானது இல்லை என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-weather-forecast-chennai-nilgiris-rainfall-tamil-news-337034/