உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள 9 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். 31 08 2021
உச்ச நீதிமன்றத்துக்கு அதிகப்பட்சமாக 34 நீதிபதிகளை நியமிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த முழு எண்ணிக்கையிலான நீதிபதிகள் நியமிக்கப்படாமல் இருக்கிறது. இந்த மாதத்தில் மூத்த நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமன், நவீன் சின்காவும் ஓய்வு பெற்ற தால், 26 ஆக இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 24 ஆக குறைந்தது.
உச்ச நீதிமன்றத்துக்கு புதிதாக ஒன்பது நீதிபதிகளை நியமிக்கும்படி, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தது.
அதன்படி தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹீமா கோலி, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா, குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பேலா திரிவேதி, கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அபய் ஓகா, குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம்நாத், சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிக்குமார், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.வி.நரசிம்மா ஆகியோர் பெயர்களை பரிந்துரைத்து.
இதை ஏற்றுக்கொண்ட மத்திய சட்ட அமைச்சகம், ஒப்புதலுக்காக குடியரசு தலைவருக்கு அனுப்பியது. அதை ஏற்ற குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், புதிய நீதிபதிகள் நியமனத் துக்கு ஒப்புதல் வழங்கினார்.
இதையடுத்து, ஒன்பது நீதிபதிகளுக்கும் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். வரலாற்றிலேயே ஒரே நாளில் 9 நீதிபதிகள் பதவி ஏற்றுக் கொள்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
source https://news7tamil.live/the-new-judges-of-the-supreme-court-were-sworn-in-today.html