தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல், 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் சற்று குறைந்து வருவதால் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 50% மாணவர்களுடன் பள்ளிகள் திறக்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை தற்போது வெளியிட்டிருக்கிறது.
வழிகாட்டு நெறிமுறைகள்
கொரோனா பரவலை தடுக்க மாணவர்களை 6 அடி இடைவெளியில் அமரவைக்க வேண்டும்.
பள்ளியில், மாணவர்கள் சானிடைசர் அல்லது சோப்பு நீர் கொண்டு கைகழுவ வசதி செய்ய வேண்டும்.
அனைத்து மாணவர்களுக்கும் உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
இதமான சூழல் இருந்தால் மாணவர்களை பள்ளி வளாகத்தில் அமரவைத்து பாடங்களை நடத்தலாம்.
முதல் நாளில் 50% மாணவர்களும், மறுநாளில் எஞ்சிய 50% மாணவர்களும் மாறி மாறி பள்ளிக்கு வரவேண்டும்.
கொரோனா அறிகுறி உள்ள மாணவர்கள், ஆசிரியர்களை பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது.
நோய் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை.
மாணவர்களுக்கு தேவையான வைட்டமின் மாத்திரைகள் பள்ளியில் வைத்திருக்க வேண்டும்.
பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருப்பதை, பள்ளி நிர்வாகம் அல்லது உள்ளாட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
பள்ளிகளில் உள்ள, மேஜைகள், இருக்கைகள், ஆய்வங்கள், நூலகங்கள், உணவகங்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.
பள்ளியில் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தலை உறுதி செய்ய வேண்டும்.
ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பிற பணியாளர்கள் 100% கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பள்ளிகளில் விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகளை நடத்த அனுமதியில்லை.
source https://tamil.indianexpress.com/education-jobs/tamilnadu-health-dept-release-guidelines-for-school-opening-333735/