Kaunain Sheriff M
Zydus Cadilas ZyCoV-D vaccine : டி.என்.ஏ. தளத்தில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் கொரோனா தடுப்பூசி சைடஸ் காடில்லாவின் ZyCoV-D ஆகும். சமீபத்தில் அவசர பயன்பாட்டிற்காக இந்த தடுப்பூசியை பயன்படுத்த கட்டுப்பாட்டாளரகம் ஒப்புதல் அளித்துள்ளது. மிகவும் முக்கியமாக இந்த தடுப்பூசி இண்ட்ராடெர்மல் வகையிலான தடுப்பூசி என்பதால் ஊசி இல்லாமல் தடுப்பு மருந்தை செலுத்தும் வசதியை கொண்டுள்ளது.
ZyCoV-D தடுப்பு மருந்தை செலுத்த பயன்படுத்தப்பட இருக்கும் நீடில் – ஃப்ரீ சிஸ்டம் என்றால் என்ன?
சைடஸ், கொலராடோவை தளமாக கொண்டு செயல்படும் பார்மா ஜெட் நிறுவனம் தயாரித்துள்ள நீடில்-ஃப்ரீ சிஸ்டத்தை பயன்படுத்த உள்ளது. குஜராத்தை தளமாகக் கொண்ட நிறுவனம் 2017 இல் ஐரோப்பாவில் ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெற்ற ‘டிராபிஸ்’ என்ற ஒரு குறிப்பிட்ட மாதிரியை தடுப்பு மருந்து செலுத்த பயன்படுத்தும்.
டிராபிஸ் ஊசி இல்லாத அமைப்பு என்றால் என்ன?
டிராபிஸ் மருந்துகளை நரம்பு வழியாக செலுத்துகிறது. அதிக அழுத்தத்தின் மூலமாக, தோல் வழியாக, தடுப்பூசி இல்லாமல் இந்த மருந்து செலுத்தப்படும். இதில் மூன்று கட்டமைப்புகள் உள்ளன. இன்ஜெக்டர், ஊசி இல்லாத சிரஞ்ச், மற்றும் நிரப்பும் அடாப்டர். இன்ஜெக்டரை முதலில் தயார் செய்து, பிறகு சிரஞ்சை நிரப்பி, இன்ஜெக்டரை ஏற்றி, டெல்டாய்ட் பகுதியில் ஊசி போடுதல் என்று நான்கு எளிமையான நடைமுறைகள் மூலம் தடுப்பு மருந்து உடலில் செலுத்தப்படுகிறது.
இதனை செலுத்திக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
இது மிகவும் துல்லியமானது. ஆனால் சிறிய அளவில் பயிற்சி தேவைப்படுகிறது. இது பயனாளிக்கும் தடுப்பூசி போடுபவருக்கும் தொற்றுநோயுடன் தொடர்புடைய கவலையைக் குறைக்கிறது. இது சுகாதாரப் பணியாளர்களுக்கு எந்த ஊசி காயத்தையும் ஏற்படுத்தாது. ஒவ்வொரு ஊசி இல்லாத சிரிஞ்சும் ஸ்ட்ரைல் செய்யப்பட்டது. தானாக செயலிழந்துவிடும். மேலும் மறுமுறை பயன்படுத்த இயலாது. எனவே இந்த தொழில்நுட்பத்தில் தவறுதலாகவோ அல்லது தற்செயலாகவோ ஒரு முறை பயன்படுத்திய ஊசியை மறுமுறை பயன்படுத்துவதற்கான வாய்ப்பே இல்லை.
source https://tamil.indianexpress.com/explained/needle-free-system-to-administer-zydus-cadilas-zycov-d-vaccine-335311/