சனி, 21 ஆகஸ்ட், 2021

ஐஏஎஸ் அதிகாரிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவம்: குவியும் வாழ்த்துகள்

 Salem IAS Officer gave birth at Govt Hospital Tamil News

Salem IAS Officer gave birth at Govt Hospital Tamil News

Salem IAS Officer gave birth at Govt Hospital Tamil News  : அரசுப் பணியில் பணிபுரிபவர்கள் அரசுப் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளை சேர்ப்பதில்லை மற்றும் அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்தத் தயங்குகிறார்கள் என்கிற குற்றச்சாட்டுப் பரவலாக எழுந்துவரும் நிலையில் சமீபத்தில், கேரளாவில் துணை வட்டாட்சியராக பணியாற்றும் அரசு அதிகாரிக்குச் சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்ட செய்தி பலராலும் வியந்து பேசப்படுகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற சேலம் மாவட்டம், பேளூர் கரடிப்பட்டியை சேர்ந்தவர் தர்மலாஸ்ரீ. தற்போது கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்ட உதவி ஆட்சியராகப் பணியாற்றி வரும் இவருக்கு, ஓராண்டுக்கு முன்பு சென்னையில் மருத்துவராக பணியாற்றி வரும் தாமரைக்கண்ணன் என்பவரோடு திருமணம் நடைபெற்றது.

மகப்பேறு காலத்தை முன்னிட்டு விடுமுறை எடுத்துக்கொண்டு கரடிப்பட்டிக்கு வந்த தர்மலாஸ்ரீ, பிரசவ தேதி நெருங்கி வந்ததும் தனியார் மருத்துவமனையில் சேர்க்க உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை விரும்பாத தர்மலா ஸ்ரீ, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 11-ம் தேதி மருத்துவமனையில் சேர்ந்த அவருக்கு, நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஒரு மாவட்டத்தை ஆளும் உயர் பதவியில் இருக்கும் தர்மலாஸ்ரீ, அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக்கொண்டது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி, இக்கட்டான கொரோனா காலத்திலும் அரசு மருத்துவமனையில் உள்ள  மகப்பேறு மற்றும் குடும்ப நலத்துறை ஓய்வின்றி சிறப்பாக செயல்பட்டு வருவதற்கு இது ஒரு முக்கிய சான்றாக அமைந்திருக்கிறது என்றும் பாராட்டி வருகின்றனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/salem-ias-officer-gave-birth-at-govt-hospital-tamil-news-334216/


Related Posts:

  • Jobs Infosys Ltd. requires For Freshers BE - B.Tech -MCA -ME - M.Tech : 2011 - 2012-2013 Passout at Bangalore -Hyderabad - Chennai - All IndiaClick here t… Read More
  • முஸ்லிம்களை குறிவைக்கும் -சி.பி.சி.ஐ.டி கடந்த 19.7.13 அன்று சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். தடையம் ஏதும் கிடைக்காத நிலையில் ஆடிட்டர் ரமேஷ் மற்றும் வெள்ளையப்பன் … Read More
  • Jobs From: shoaa-82@hotmail.com Date: Tuesday, August 06, 2013 Category: Jobs Offered Region: Bahrain Description: Hey,Im a lady living in Bahrain and lo… Read More
  • மகத்துவமிக்க இரவு மகத்துவமிக்க இரவில் இதை (குர்ஆனை) நாம்அருளினோம்.மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித்தெரியும்?மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை வ… Read More
  • மதுவிலக்கு தமிழகத்தில் 1947ல் இருந்து 1971ம் ஆண்டு வரை சுமார் 24 ஆண்டுகள் பூரண மதுவிலக்கு அமலில் இருந்தது. ஓமந்தூர் ராமசாமி, பக்தவச்சலம், அண்ணாதுரை, காமராஜர் மத… Read More