25 08 2021
Union Cabinet Minister Narayan Rane arrest procedure Tamil News : மத்திய அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் நாராயண ரானே, முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு எதிராகப் பேசியது தொடர்பாக மூன்று எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா காவல்துறையினர் ரானேவை கைது செய்ய ஓர் குழுவை அனுப்பியுள்ள நிலையில், மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், மாநில அரசு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை அமைச்சரைக் கைது செய்வது “நெறிமுறைக்கு எதிரானது” என்றும், ஒரு மத்திய அமைச்சருக்கு எப்படி கைது வாரண்ட் பிறப்பிக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றம் அமர்வில் இல்லாதபோது, ஒரு கேபினட் அமைச்சர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்தால் அப்போது சட்ட அமலாக்க நிறுவனத்தால் அவரை கைது செய்ய முடியும். நடைமுறைகள் மற்றும் வணிக நடத்தை விதிகள் பிரிவு 22 A-ன் படி, காவல்துறை, நீதிபதி அல்லது மாஜிஸ்திரேட் கைது செய்யப்பட்டதற்கான காரணம், காவலில் வைக்கப்பட்ட இடம் ஆகியவற்றைப் பற்றி மாநிலங்களவை தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அவ்வாறு கைது செய்யப்பட்டால் மாநிலங்களவை தலைவர் பின்பற்ற வேண்டிய நடைமுறை என்ன?
அமர்வில் இருக்கும்போது, அமைச்சர் கைது குறித்து மாநிலங்களவை தலைவர் கவுன்சிலுக்கு அறிவிக்கவேண்டும். கவுன்சில் அமரவில்லை என்றால், உறுப்பினர்களின் தகவலுக்காக அதை அறிவிப்பில் தலைவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலங்களவை உறுப்பினர்களின் கைது தொடர்பான சலுகைகள் என்ன?
பாராளுமன்றத்தின் முக்கிய சலுகைகளின்படி, சிவில் வழக்குகளில், சிவில் நடைமுறைகள் கோட் பிரிவு 135-ன் படி, அவர்கள் சபை தொடரும் போது மற்றும் அதன் தொடக்கத்திற்கு 40 நாட்களுக்கு முன்பும் மற்றும் அதன் முடிவுக்கு 40 நாட்களுக்கு பிறகும் கைது செய்யப்படுவதற்கான சுதந்திரம் உள்ளது. இவ்வாறு கைது செய்வதிலிருந்து விடுதலையின் சலுகை, கிரிமினல் குற்றங்கள் அல்லது தடுப்புக்காவலில் தடுத்து வைக்கப்பட்ட வழக்குகளுக்குக் கிடைக்காது.
வீட்டின் வளாகத்திலிருந்து ஒருவரைக் கைது செய்ய முடியுமா?
தலைவர் அல்லது சபாநாயகரின் முன்அனுமதியின்றி ஒரு உறுப்பினராக இருந்தாலும் அல்லது அந்நியராக இருந்தாலும், கைது செய்ய முடியாது. இதேபோல், சிவில் அல்லது கிரிமினல் போன்ற எந்த சட்ட செயல்முறையும், சபை அமர்விலிருந்தாலும் இல்லாவிட்டாலும் தலைவர்/சபாநாயகரின் முன்அனுமதி பெறாமல், சபையின் எல்லைக்குள் பணியாற்ற முடியாது.
இதற்கிடையே, நாராயண் ரானேவுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மஹத்தில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
source https://tamil.indianexpress.com/explained/union-cabinet-minister-narayan-rane-arrest-procedure-tamil-news-335654/