சனி, 21 ஆகஸ்ட், 2021

2024 நாடாளுமன்ற தேர்தலே இறுதி இலக்கு : எதிர்கட்சி கூட்டத்தில் சோனியா காந்தி பேச்சு

 20 08 2021

Tami National News Update : பல முக்கிய மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தல்களுக்கு முன்னதாக ஆளும் பாஜக தலைமையிலான என்டிஏ அரசுக்கு எதிராக ஒரு பொதுவான வியூகத்தை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக தேசிய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில், எதிர்கட்சி தலைவர்களின் மெய்நிகர் கூட்டம் (வெள்ளிக்கிழமை) இன்று நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியுடன் 18 எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், மம்தா பானர்ஜி (மேற்கு வங்கம்), மு.க.ஸ்டாலின் (தமிழ்நாடு), உத்தவ் தாக்கரே (மகாராஷ்டிரா) மற்றும் ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட்) ஆகிய நான்கு மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலே இறுதி இலக்கு என்று கூறிய சோனியா காந்தி எதிர்க்கட்சிகள் “சுதந்திர இயக்கத்தின் மதிப்புகள் கொள்கைகள் மற்றும் ஏற்பாடுகளில் நம்பிக்கை கொண்ட ஒரு அரசாங்கத்தை நம் நாட்டிற்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் முறையாக திட்டமிடத் தொடங்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் தற்போதுள்ள அரசாங்கம் “பிடிவாதமான மற்றும் அமல்படுத்தும் திட்டங்கள் குறித்து விவாதிக்க விருப்பமில்லாமை” உள்ளிட்டவற்றை கடைபிடிப்பதாக என்று குற்றம் சாட்டிய அவர், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தொடங்கிய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில், இரு அவைகளிலும் அனைத்து எதிர்க்கட்சிகளும் பெகாசஸ் விவகாரத்திற்கு விளக்கம் கேட்டு அமளியில் ஈடுபட்டனர். இதில் விவசாய சட்டங்கள் மற்றும் இதர பிரச்சினைகள் குறித்து விளக்கங்கள் கேட்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

“பெகாசஸ் விவகாரம், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வது போன்ற பொது முக்கியத்துவம் வாய்ந்த அவசர பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க அரசாங்கத்தின் “பிடிவாதம் மற்றும் விவாதிக்க விருப்பமின்மை காரணமாக” நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இது எழுச்சி, கூட்டாட்சி மற்றும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் பாதிக்கும் ஜனநாயக அமைப்புகள் மீதான தாக்குதல் என்றும் குறிப்பிட்ட அவர், “பாராளுமன்றத்தின் எதிர்கால அமர்வுகளிலும் எதிர்கட்சிகளின் இந்த ஒற்றுமை நிலைத்திருக்கும் என்று நான் நம்புகிறேன், ஆனால் அதற்கு வெளியே பெரிய அரசியல் போர் நடத்தப்பட வேண்டும்” என்று கூறினார்.

மற்ற பின்தங்கிய வகுப்பினரை (ஓபிசி) அடையாளம் காணவும், மாநிலங்களின் நீண்டகால உரிமைகளை மீட்டெடுப்பதற்காக அரசியலமைப்பு (127 வது திருத்தம்) மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு முற்றிலும் எதிர்க்கட்சிகள் தான் காரணம் என்று அவர் கூறினார். இந்த மசோதா மூன்று ஆண்டுகளுக்கு முன்பு செய்த தவறை சரிசெய்யவும், அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தேவை என்றும் கூறினார். மேலும் காங்கிரஸின் தலையீட்டிற்குப் பிறகு, கோவிட் தடுப்பூசிகளை வாங்கும் கொள்கையில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும்,  வரவிருக்கும் பாராளுமன்ற அமர்வுகளில் இத்தகைய எதிர்க்கட்சி ஒற்றுமைக்கு நம்பிக்கையும் தெரிவித்தார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு எதிரான கூட்டு இயக்கங்கள் குறித்து முடிவெடுக்க எதிர்க்கட்சித் தலைவர்களின் முக்கிய குழுவை அமைக்க முன்மொழிந்தார். தொடர்ந்து பேசிய அவர், எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, காவி கட்சிக்கு எதிராக ஒன்றுபட்டு போராட வேண்டும் தலைவர் யார் என்பதை மறந்துவிடுவோம், தனிப்பட்ட நலன்களை ஒதுக்கி வைப்போம். மக்கள் தான் தலைவர். ஒரு முக்கிய குழுவை அமைத்து அடுத்த நடவடிக்கை மற்றும் திட்டங்களை முடிவு செய்ய ஒன்றாக வேலை செய்வோம், ”என்று கூறியுள்ளார்.

இன்றைய கூட்டத்தில் தேசிய மாநாட்டின் பரூக் அப்துல்லா, என்சிபியின் சரத் பவார், எல்ஜேடியின் சரத் யாதவ் மற்றும் சிபிஎம்மின் சீதாராம் யெச்சூரி ஆகியோர் கலந்து கொண்டனர். இருப்பினும், எஸ்பியிலிருந்து யாரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், எதிர் கட்சிகள் செப்டம்பர் 20-30 வரை நாடு முழுவதும் கூட்டாக போராட்டங்களை ஏற்பாடு செய்வதாகக் கூறின.

“இந்த பொது எதிர்ப்பு நடவடிக்கைகளின் வடிவங்கள் மாநிலங்களில் இருக்கும் கோவிட் விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளின் உறுதியான நிலைமைகளைப் பொறுத்து, கட்சிகளின் அந்தந்த மாநில அலகுகளால் தீர்மானிக்கப்படும். இதில், தர்ணாக்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், ஹர்த்தால் போன்றவை அடங்கும். “19 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நாங்கள், மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசுக் கட்டளையை எங்களால் முடிந்த அளவு பாதுகாக்க இந்திய மக்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். இந்தியாவை இன்றே காப்பாற்றுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/india/tamil-india-oppn-patry-leaders-meeting-plan-systematically-for-2024-polls-334386/