24 08 2021 கொரோனா வைரஸ் தொற்றுநோய் காலத்தில் 2020-21 முதல் ஆண்டில் 1.42% சாதகமான வளர்ச்சி விகிதத்தைக் கண்ட ஒரு தென் மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. இது சமீபத்தில், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. இதில், தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் சுமார் 2%என கணிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 2ம் தேதி வரை தொகுக்கப்பட்ட இந்த தரவுகளில் கேரளா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களின் புள்ளிவிவரங்கள் இல்லை. இருப்பினும், கிடைத்துள்ள தகவலில், தென் மாநிலங்களின் வளர்ச்சி விகிதம் ஆந்திரா மைனஸ் -2.58%, கர்நாடகா மைனஸ் -2.62%, தெலங்கானா மைனஸ் -0.62% மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் வளர்ச்சி விகிதம் – மைனஸ் -3.46% சுருங்கியுள்ளன. அகில இந்திய அளவில், வளர்ச்சி விகிதம் மைனஸ் -7.3% என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புள்ளிவிவரங்கள் திருத்தத்திற்கு உட்பட்டவை என்று ஒரு பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார். உதாரணமாக, 2019-20ஆம் ஆண்டிற்கான தற்காலிகமாக உருவாக்கப்பட்ட 8.03% தமிழக வளர்ச்சியின் எண்ணிக்கை 6.13%ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2020-21ம் ஆண்டில், முதன்மைத் துறைகளின் செயல்திறன் தமிழகம் நேர்மையான வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்ய உதவியுள்ளது. முதன்மையான துறைகளில் ஒன்றான விவசாயம் 6.89% வளர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது. முழுமையான அடிப்படையில், விவசாய உற்பத்தியின் மதிப்பு ₹ 53,703 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. தானிய உற்பத்தி 113.4 லட்சம் டன்னாக இருந்தது. அதில் அரிசி (நெல்) கிட்டத்தட்ட 73 லட்சம் டன்னாகவும் தினை 36 லட்சம் டன், பருப்பு வகைகள் 4.4 டன்னாக இருந்தது. மற்ற விவசாய பயிர்களைப் பொறுத்தவரை, கரும்பு உற்பத்தி 128 லட்சம் டன்னாகவும் எண்ணெய் வித்துகள் 9.82 லட்சம் டன்னாகவும் பருத்தி 2.5 லட்சம் மூட்டைகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கால்நடை மற்றும் மீன்பிடித்தல் சமமான கவர்ச்சிகரமான வளர்ச்சியக் காட்டினாலும், முதன்மைத் துறையில் வனவியல், மரம் வளர்ப்பு மற்றும் சுரங்கம் மற்றும் குவாரி ஆகியவை வேறுபடுகிறது. தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக, சுரங்கம் மற்றும் குவாரியின் பிரிவு விழ்ச்சியைக் காட்டியது. இந்த முறை, அது மைனஸ் -17.8%ஆக உள்ளது.
உற்பத்தி, கட்டுமானம், மின்சாரம் மற்றும் பிற பயன்பாட்டு சேவைகளை உள்ளடக்கிய இரண்டாவது துறைகளின் வளர்ச்சி பற்றி சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை. இந்தத் துறை 0.36% நேர்மறையான வளர்ச்சியைக் காட்டியுள்ளது.
சேவைத் துறையைப் பொறுத்தவரை, செயல்திறன் இரண்டாம் நிலை செயல்திறனை விட ஓரளவு சிறப்பாக உள்ளது. நிதிச் சேவைகள் 10.83% மற்றும் ரியல் எஸ்டேட் 0.62% என மாறியுள்ளன. ஹோட்டல்கள், உணவகங்கள், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு போன்ற பிற பிரிவுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இந்த மதிப்பீட்டின்படி, அனைத்து வகையான வரிகளும் – சரக்கு & சேவை வரி, சுங்க மற்றும் கலால் வரிகள் மூலம் – கடந்த ஆண்டு மாநிலத்திற்கு சுமார் ரூ.1.6 லட்சம் கோடி கிடைத்தது. இது முந்தைய ஆண்டை விட சுமார் ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. உணவு, உரம் மற்றும் பெட்ரோலியம் போன்ற பொருட்களுக்கான மானியங்களின் மதிப்பு, சுமார் ரூ.20,590 கோடி, இது 2019-20-ஐ விட சுமார் ரூ.2,000 கோடி குறைவாக உள்ளது.
இந்த புள்ளிவிவரங்களின்படி, கொரோனா வைரஸ் தொற்றுநோய் காலத்தில் 2020-21 முதல் ஆண்டில் தென் மாநிலங்களில் தமிழ்நாடு 1.42% வளர்ச்சி விகிதத்தைக் கண்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-emerged-as-only-southern-state-to-positive-growth-rate-covid-19-pandemic-year-335412/