வியாழன், 6 ஜனவரி, 2022

ஒரே நாளில் 4,862 பேருக்கு கொரோனா

 6 1 2022 தமிழகத்தில் திடீரென கொரோனா வைரஸ் தொற்று திடீரென அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிபால் இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு, தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு இன்று 4,862 பதிவாகி 5,000-ஐ நெருங்கியுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 27,60,449 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிபால் இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 36,814 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும், 688 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 27,07,058 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

அதே நேரத்தில், சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 2,481 பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் சென்னையில் இன்று 4 பேர் உயிரிழந்தனர். கோவையில் 3 பேர் இறந்துள்ளனர்.கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் மிக மிக குறைவாக இருக்கிறது.

அதே நேரத்தில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புக்கு மருத்துவமனையில் 16,577 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று கடந்த 4 நாட்களாக அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 1,17,382 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 5,70,33,924 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் 596 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 259 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 127 பேருக்கும், மதுரையில் 52 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 97 பேருக்கும், திருவள்ளூரில் 209 பேருக்கும், திருச்சியில் 51 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 80 பேருக்கும், ஈரோட்டில் 43 பேருக்கும், சேலத்தில் 75 பேருக்கும், நாமக்கல்லில் 33 பேருக்கும், தஞ்சாவூரில் 26 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை, கோவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவள்ளுர், தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களின் நிலை மிக மிக மோசமாக உள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/coronavirus-positive-rate-increasing-fast-in-tamilnadu-393044/