செவ்வாய், 4 ஜனவரி, 2022

தேர்தல் நடத்தும் 5 மாநிலங்கள் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும் – தேர்தல் ஆணையம்

 கோவிட்-19 தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தும் 5 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. மணிப்பூரில் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் சதவீதம் குறைவாக இருப்பது குறித்து தேர்தல் குழு கவலை தெரிவித்துள்ளது.

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து கடந்த வாரம் லக்னோவில் தேர்தல் ஆணையம் செய்தியாளர் சந்திப்பு நடத்தியதை அடுத்து இந்த பரிந்துரை வந்துள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். செய்தியாளர் சந்திப்பில், தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, தடுப்பூசி செலுத்துப் பணியை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது என்றார்.

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரக்காண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது.

முன்னதாக, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், பிரதமர் நரேந்திர மோடி, வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அதிகரித்து வரும் தொற்றுகள் மற்றும் மூன்றாவது அலையை கருத்தில் கொண்டு பேரணிகள், கூட்டங்கள் மற்றும் தேர்தல்களை நிறுத்துவது மற்றும் ஒத்திவைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இருப்பினும், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் திட்டமிட்டபடி சட்டமன்றத் தேர்தலை நடத்த விரும்புவதாக தேர்தல் ஆணையம் கூறியது. “அனைத்து அரசியல் கட்சிகளும், எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல், கோவிட் நெறிமுறையைப் பின்பற்றி சரியான நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறியது” என்று தேர்தல் ஆணையம் கூறியது.

தேர்தலை ஒத்திவைப்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்குமா என்று கேட்டதற்கு, “அரசியலமைப்புச் சட்டத்தின்படி தேர்தல் ஆணையம் தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை நிறைவேற்றும். அந்த பொறுப்பை நிறைவேற்றும்போது, கோவிட் எண்ணிக்கை அதிகரித்து வருவதையோ அல்லது அதிகரித்து வரும் கூட்டங்களை நிர்வகிப்பதையோ கருத்தில் கொள்ள வேண்டிய தேவை எதுவாக இருந்தாலும், அதைக் கருத்தில் கொண்டு தேர்தல் அறிவிக்கப்படும்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 86 சதவீதம் பேர் கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸையும் 49 சதவீதம் பேர் இரண்டாவது டோஸையும் போட்டுக்கொண்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. 15-20 நாட்களில், தகுதியான அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி போடப்படும் உறுதியளிக்கப்பட்டுள்ளாது. நாங்கள் தடுப்பூசியை அதிகரிக்கக் கூறினோம்.

கடந்த வாரம், ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கோவிட் -19 நிலைமையை மதிப்பாய்வு செய்வதற்காக தேர்தல் ஆணையம் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷனுடன் ஒரு சந்திப்பை நடத்தியது.

அம்மாநிலங்களின் தடுப்பூசி பாதுகாப்பு தேசிய சராசரியை விட குறைவாக இருப்பதாக அறிக்கைகள் வந்ததை அடுத்து, சுகாதார அமைச்சகம் உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு பலதுறை குழுக்களை அனுப்பியது.

சுகாதார செயலாளர் டிசம்பர் 23ம் தேதி பாதிப்புக்கு எளிதில் இலக்காகக்கூடிய மக்களைப் பாதுகாக்க, குறிப்பாக குறைவாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில், அதிவேகமாக தடுப்பூசிகளை அதிகரிக்க வேண்டும்” என தேர்தலைச் சந்திக்கும் மாநிலங்களுக்கு உத்தரவிட்டார்.

பூஷன், அனைத்து மாநிலங்களுடனான மறுஆய்வுக் கூட்டத்தின் போது, ​​புதிய ஒமிக்ரான் தொற்றால் குறைந்த அளவு தடுப்பூசி செலுத்தப்பட்ட பகுதிகள் அதிகம் பாதிக்கப்படலாம் என்றும், இந்த பகுதிகளில் தடுப்பூசியை அதிகரிக்க மாவட்ட நிர்வாகங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

source https://tamil.indianexpress.com/india/election-commission-asks-five-poll-bound-states-to-ramp-up-covid19-vaccination-392037/