செவ்வாய், 4 ஜனவரி, 2022

புத்தாண்டுக்கு முதல் நாளில் 33,000 ஆணுறைகள் ஆன்லைனில் ஆர்டர்

  புத்தாண்டுக்கு முதல் நாளில் 33,000 ஆணுறைகள் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக சொமாட்டோ நிறுவனர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனமான சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் புத்தாண்டுக்கு முதல் நாள் விற்பனை செய்யப்பட்ட பொருள்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யும் பிளின்கிட் தளத்தில் புத்தாண்டுக்கு முந்தைய நாளில் மட்டும் 33,000 ஆணுறைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரே ஒரு வாடிக்கையாளர் மட்டும் 80 ஆணுறைகளை வாங்கியுள்ளார்.

மேலும், 1.3 லட்சம் லிட்டர் சோடா, 43,000 பாட்டில்கள் குளிர்பானங்கள், 6,712 டப் ஐஸ்க்ரீம், 28,240 பாப்கார்ன் அந்த தளத்தில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. மேலும், 10,000 கொரோனா சுயசோதனை கருவியும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 31-ம் தேதி மாலை 7 மணி நிலவரப்படி சொமாட்டோவுக்கு ஒரு நிமிடத்துக்கு 7,100 ஆர்டர்களும், ஸ்விக்கிக்கு ஒரு நிமிடத்துக்கு 9,000 ஆர்டர்களும் வந்துள்ளன.

source https://tamil.indianexpress.com/india/over-33000-condoms-are-ordered-in-online-on-new-years-eve-391937/

Related Posts: