6 1 2022 அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், அறிகுறிகளற்ற கொரோனா நோயாளிகளின் ஐசோலேஷன் காலத்தை 10 நாட்களில் இருந்து 5 ஆக குறைத்ததை தொடர்ந்து இந்தியாவும் மிதமான தாக்கம் அல்லது அறிகுறிகளற்ற நோயாளிகளுக்கான “வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும்” வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டு புதிய அறிவிப்பை வெளியிட்டது. அமெரிக்காவை போன்றே இந்தியாவும் தனிமைப்படுத்தும் காலத்தை குறைத்துள்ளது. நோயாளி தனிமையில் இருந்து வெளியேறும் முன் பரிசோதனைவதையும் புதிய வழிகாட்டு நெறிமுறை பரிந்துரை செய்யவில்லை.
திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள்
புதிய வழிகாட்டுதல்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 7 நாட்களும், காய்ச்சல் அறிகுறிகள் இல்லாமல் தொடர்ந்து மூன்று நாட்களும் ஆன நிலையில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட நோயாளி தன்னுடைய தனிமையை 7 நாட்களுக்கு பிறகு விலக்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட நோயாளி தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள வழிகாட்டுதல் நெறிமுறை, தனிமை காலம் முடிந்த பிறகு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர்களின் அறிகுறியற்ற தொடர்புகள் கொரோனா சோதனை மேற்கொள்ளவும், தனிமைப்படுத்திக் கொள்ளவும் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.
உயர் ரத்த அழுத்தம், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், நீரிழிவு நோய், மற்றும் எச்.ஐ.வி., உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நபர்கள் போன்ற நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளிகள் மருத்துவரின் முறையான மதிப்பீட்டிற்கு பிறகே வீட்டில் தனிமைப்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளிகளுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுதலை வழிகாட்டுதல்கள் பரிந்துரை செய்யவில்லை.
ஒமிக்ரானின் தன்மை
கடந்த வாரம் இருந்த கொரோனா தொற்றைக் காட்டிலும் 6 மடங்கு கொரோனா தொற்றுகள் இந்த வாரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 2.14 லட்சம் நோயாளிகள் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்கிறது சுகாதாரத்துறை தரவுகள். இதே நேரத்தில் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. ஆக்ஸிஜன் மற்றும் ஐ.சி.யூ படுக்கைகளை நாடும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது.
தற்போது உலகம் முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு காரணமாக இருக்கும் ஒமிக்ரான் தொற்று அதிகமாக பரவும் தன்மை கொண்டது ஆனால் டெல்டாவுடன் ஒப்பிடும் போது மிகவும் மிதமான நோய் தாக்கத்தையே இது ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வைரல் லோட் குறைவாக இருக்கும் காரணத்தால் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உடனுக்குடன் உடல் நலம் தேறிவிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒமிக்ரானின் குறைவான பரவும் காலம் மற்றும் மிதமான நோய் தாக்கத்தில் இருந்து மீளும் தன்மை ஆகியவையே தற்போது அமெரிக்கா மற்றும் இந்தியாவில் வழிகாட்டுதல்களில் மாற்றங்களை ஏற்படுத்த வழிவகை செய்துள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சோதனைத் தேவையை தளர்த்துவது தொற்றுநோய்களின் எழுச்சியின் அழுத்தத்தில் இருக்கும் மருத்துவ துறையின் சிறிது சுமைகளை குறைக்க உதவும் என்று அவர்கள் கூறினர்.
source https://tamil.indianexpress.com/explained/as-omicron-surges-why-india-and-us-have-tweaked-home-isolation-protocols-393118/