திங்கள், 3 ஜனவரி, 2022

நீட் ஒதுக்கீடு: EWSக்கு ரூ8 லட்சம் வருமான வரம்பு நீடிக்கும்; குழுவின் அறிக்கையை ஒப்புக்கொண்ட மத்திய அரசு

 3 1 2022 நீட் முதுநிலை மருத்துவப் படிப்பு (NEET-PG) சேர்க்கை தொடர்பான விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், “ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சம் வரை உள்ள குடும்பங்கள் மட்டுமே பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டின் பலனைப் பெற தகுதியுடையவர்கள்” என்று மத்திய அரசு அமைத்த குழு பரிந்துரைத்துள்ளது.

தற்போதைய சேர்க்கை நடைமுறையில் நீட் முதுநிலை மருத்துவப் படிப்பு (NEET-PG) சேர்க்கைக்கான பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களின் (EWS) இடஒதுக்கீட்டிற்கான ஆண்டு வருமான வரம்பை ரூ.8 லட்சமாக நிர்ணயித்ததைத் தொடர மத்திய அரசு அமைத்த குழுவின் பரிந்துரையை ஏற்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

வருமான வரம்பை எப்படி நிர்ணயிப்பது என்பது குறித்த பரிந்துரைகள் அடுத்த சேர்க்கை சுழற்சியில் இருந்து ஏற்றுக்கொள்ளப்படும் என நீட் அகில இந்திய ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களின் இடஒதுக்கீட்டு பிரச்சினையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 சதவீத இடஒதுக்கீடும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (இ.டபிள்யூ.எஸ்) 10 சதவீத இடஒதுக்கீடும் வழங்கும் மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி (எம்சிசி) ஜூலை 29ம் தேதி வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு வருமான வரம்பு ரூ.8 லட்சம் அளவு எப்படி வந்தது என்பதை விளக்குமாறு மத்திய அரசிடம் நீதிமன்றம் கேட்டதையடுத்து, மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்ய நான்கு வாரங்கள் அவகாசம் கேட்டது.

மத்திய அரசின் குழு டிசம்பர் 31ம் தேதி தனது அறிக்கையை சமர்ப்பித்தது. மேலும் “புதிய அளவுகோல்களை வருங்காலத்தில் பயன்படுத்துவதற்கான பரிந்துரையை ஏற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது” என்று பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளது.

2019 முதல் இடஒதுக்கீட்டைப் பெற நிர்ணயிக்கப்பட்ட ரூ. 8 லட்சம் வருமான வரம்பு தொடர ஆதரவளிக்கும் இந்த குழுவின் அறிக்கையை அரசாங்கம் இணைத்துள்ளது. ஆனால், அது சில மாற்றங்களை பரிந்துரைத்துள்ளது.

இந்த அறிக்கையின்படி, “பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான தற்போதைய மொத்த ஆண்டு குடும்ப வருமான வரம்பு ரூ. 8 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை உள்ள குடும்பங்கள் மட்டுமே EWS இடஒதுக்கீட்டின் பலனைப் பெற தகுதியுடையவர்கள். குடும்பம் மற்றும் வருமானம் ஆகியவற்றின் வரையறை ஜனவரி 17, 2019 தேதியிட்ட அலுவலக ரீதியான அறிவிப்பு ஒத்ததாகவே இருக்கும்.

இ.டபில்யூ.எஸ் வருமானத்தைப் பொருட்படுத்தாமல், 5 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் அதற்கு மேல் உள்ள நபரை இதில் விலக்கலாம் என்று கூறியுள்ளது. மேலும், குடியிருப்பு சொத்து அளவுகோல்களை முழுவதுமாக நீக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது.

எந்த ஆண்டிலிருந்து இந்த மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பொருந்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு, தற்போதுள்ள முறை 2019 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது என்றும், அப்போதே இந்தக் கேள்வியை நீதிமன்றம் ஆய்வு செய்யத் தொடங்கியது. மேலும், இந்த குழுவை நியமிப்பதன் மூலம் நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது, சில நியமனங்கள் / சேர்க்கைகள் தொடர்பாக நடந்த செயல்முறை அல்லது மேம்பட்ட நிலையில் இருந்திருக்க வேண்டும்.

“தற்போதுள்ள முறை… செயல்படுத்தும்போது தோல்வியுற்றால், பயனாளிகளுக்கும் அதிகாரிகளுக்கும் எதிர்பார்த்ததை விட அதிக சிக்கல்களை உருவாக்கும்” என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

மேலும், “கல்வி நிறுவனங்களில் சேர்க்கையின் போது, ​​​​ஒரு புதிய அளவுகோலைத் தவிர்க்க முடியாமல் மற்றும் அவசியம் ஏற்றுக்கொள்வதால் செயல்படுத்துவதில் தாமதத்தையும் பல்வேறு சட்டப்பூர்வ / நீதித்துறை பரிந்துரைகளின் கீழ் வரவிருக்கும் அனைத்து சேர்க்கைகள் மற்றும் கல்வி நடவடிக்கைகள் / கற்பித்தல் / பரீட்சை ஆகியவற்றில் தவிர்க்க முடியாத அடுக்கடுக்கான விளைவை பல மாதங்களில் ஏற்படுத்தும்.” என்று கூறியுள்ளது.

எனவே, இந்த குழு கூறுகையில், “இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட புதிய அளவுகோல்களை பயன்படுத்துவது முற்றிலும் விரும்பத்தகாதது. நடைமுறைக்கு மாறானது. தவிர்க்க முடியாத தாமதம், தவிர்க்கக்கூடிய சிக்கல்களின் விளைவாக தற்போதைய செயல்முறைகளுக்கு மத்தியில் இலக்கை மாற்றுகிறது.” என்று தெரிவித்துள்ளது.

“தற்போதுள்ள முறை 2019ம் ஆண்டிலிருந்து தொடர்வதால், ​​இந்த ஆண்டும் அது தொடர்ந்தால் பெரும் தவறுகள் ஏற்படாது. இந்த அளவுகோலை நடுவில் மாற்றுவது, நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில், திடீரென தகுதி மாற்றப்படும் மக்களால் வழக்குகள் தொடரப்படும்” என்று தெரிவித்துள்ளது.

“சாதக பாதகங்களை ஆய்வு செய்து, தீவிர பரிசீலனைக்குப் பிறகு இ.டபில்யூ.எஸ் இடஒதுக்கீடு கிடைக்கப்பெறும் ஒவ்வொரு செயலிலும் தற்போதுள்ள அளவுகோல்கள் தொடரவும் மற்றும் அதே அளவுகோல்களை குழு பரிந்துரைக்கிறது. இந்த அறிக்கை அடுத்த விளம்பரம் / சேர்க்கை சுழற்சியில் இருந்து பொருந்தும்.” என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/india/ews-criteria-annual-income-rs-8-lakh-limit-neet-admission-supreme-court-391556/