வெள்ளி, 6 மே, 2022

தென் மாவட்டங்களில்தான் சாதிகயிறு கட்டும் பழக்கம்: அமைச்சர்

 32,000 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள EA மாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நேற்று நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் 32,000 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை. மாணவர்களுக்கு சொல்லிக் கொள்வது ஒன்றுதான் பயப்பட வேண்டாம்” என்று அறிவுறுத்தினார்.

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலமாக மாணவர்கள் தேர்வு எழுத வராமல் இருந்த காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், “மாணவர்களை பள்ளிக்கும் அழைத்து வரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளோம். வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை குறைய வேண்டும் என்பது எங்கள் ஆசை” என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மாணவர்களுக்கு தேர்வு வரும் போது பயம் வருகிறது, மாணவர்கள் தயக்கம் இல்லாமல் வருகை தந்து தேர்வு எழுத வேண்டும், மாணவர்கள் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர் எனவே பயம் இல்லாமல் வருகை தரவேண்டும் என்பது தான் மீண்டும் மீண்டும் சொல்வது என்றம் வலியுறுத்தினார்.

மேலும், “தென் மாவட்டங்களில்தான் சாதி கயிறு கட்டும் பழக்கம் உள்ளது என்றும், பள்ளிகளில் இந்த இந்த மாதிரியான சாதி கயிறு கட்டி வருவது கண்டிக்கத்தக்கது மட்டுமல்லாமல் வேதனைக்குரியது” என்றும் கூறினார்.

source https://news7tamil.live/minister-anbil-mahesh-says-32000-students-not-come-to-exam.html