புதன், 12 அக்டோபர், 2022

தமிழகம் முழுவதும் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலி

 

விசிக சார்பில் முன்னெடுக்கப்பட்ட சமூக நல்லிணக்க மனித சங்கிலி தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்றது. 

மத அடிப்படையில் மக்களுக்கு இடையே பகையை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைக்க நினைக்கும் பிரிவினைவாத சக்திகளை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில், இன்று தமிழகம் முழுவதும் 500 இடங்களில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெற்றது.

சென்னையில் சிம்சன் பெரியார் சிலை முதல் அண்ணா மேம்பாலம் வரை மனித சங்கிலி நடைபெறுகிறது. இந்த மனித சங்கிலியில், திமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, மதிமுக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள்ர் இந்த மனித சங்கிலியில் பங்கேற்றனர்.

சுமார் 17 அரசியல் கட்சிகளும் 40ககும் மேற்பட்ட இயக்கங்களும் இந்த மனித சங்கிலி இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதில் விசிக தலைவர் திருமாவளவன், முத்தரசன், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, கே.பாலகிருஷ்ணன், வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மனித சங்கிலியில் அசம்பாவிதங்கள் ஏற்பட கூடாது என்பதற்காக 200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.

மதுரையில் சு.வெங்கடேசன் எம்பி தலைமையிலும், கோவையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுசெயலாளர் கு.ராமகிருஷ்னன் மற்றும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதேபோல் சேலம், திருநெல்வேலி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆரணி, ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

source https://news7tamil.live/human-chain-crusade-started-all-over-tamil-nadu.html