கோடை விடுமுறைக்காக உதகை வரும் சுற்றுலாப் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் தங்கும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா எச்சரித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை சீசன் களைகட்டி வருகிறது. கர்நாடகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் உதகையில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், உதகையில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் போன்றவை, சுற்றுலாப் பயணிகளிடம் பல மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் தங்கும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்த உதவி உண்களையும் அவர் அறிவித்துள்ளார். புகார் ஏதேனும் இருப்பின் 9442628185,9444820460 மற்றும் 9943126000 என்ற வாட்சஅப். எண்ணுக்கும் புகார் தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளார்.