8 1 2023
கி.பி. 1610 ஆண்டு, ஜனவரி 7ல் தலைசிறந்த வானியலாளரான கலிலியோ கலிலி சூரியக் குடும்பத்தின் வியாழன் கோளை, தம் தொலைநோக்கி மூலமாக ஆராய்ந்து, அதனைச் சுற்றிவரும் 4 நிலவுகளை முதன்முதலில் கண்டுபிடித்தார். உலகையே திரும்பி பார்க்க வைத்த இக்கண்டுபிடிப்பைக் கொண்டாடும் வகையில், இந்த நட்சத்திரத் திருவிழாவானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆஸ்ட்ரானமி & சயின்ஸ் சொசைட்டி, மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் அமைப்பு, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் , பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் மற்றும் சென்னை வானியல் குழுமம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஜனவரி 7,8 & 9 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் “நட்சத்திரத் திருவிழா” என்ற வானியல் நிகழ்ச்சியை மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
கி.பி. 1610 ஆண்டு, ஜனவரி 7ம் நாளில் தலைசிறந்த வானியலாளர் கலிலியோ கலிலி அவர்கள், சூரியக் குடும்பத்தின் வியாழன் கோளை, தம் தொலைநோக்கி மூலமாக ஆராய்ந்து, அதனைச் சுற்றிவரும் 4 நிலவுகளை முதன்முதலில் கண்டுபிடித்தார். உலகைப்புரட்டிப் போட்ட இக்கண்டுபிடிப்பைக் கொண்டாடும் வகையில், இந்த நட்சத்திரத் திருவிழாவானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,
இதில், வானவியலில் ஆர்வம் உள்ளவர்கள், மாவட்ட வானியல் மன்றங்கள், உள்ளூர் வானியல் மன்றங்கள், அமெச்சூர் வானியலாளர்கள்,தனிப்பட்ட வானியல் நோக்கர்கள், ஆர்வலர்கள் என ஏராளமானோர் பங்கேற்கின்றனர். இந்த திருவிழாவில், நிலா, கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றை குறித்தும், வானவியலை நன்கு அறிந்துகொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமையும் என நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெசண்ட் நகர் கடற்கரை, போரூர், தாம்பரம் மேற்கு, கண்ணகி நகர், திருவான்மியூர் – திருவள்ளுவர் நகர் கடற்கரை, அண்ணா நூற்றாண்டு நூலகம், தாம்பரம் சென்னை கிறித்தவ கல்லூரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் இந்நிகழ்வு நடக்க உள்ளது.
பல்வேறு வகையான தொலைநோக்கிகள் மற்றும் பைனாக்குலர்கள் மூலமும், எளிய செயல் விளக்கக் கருவிகளைக் கொண்டும், வான்பொருட்களை வெறும் கண்களாலேயேக் காணக்கூடிய வகையிலும் , இரவு வானில் உள்ள பல நட்சத்திரக் கூட்டங்களையும் விளக்கிக் கூறும் விதத்திலும் வானியல் வல்லுநர்கள், ஆர்வலர்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இதன் மூலம் வானியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுவதுடன் அறிவியல் ரீதியாக சிந்திக்க இந்த நிகழ்ச்சி உதவிகரமாக இருக்கும் எனவும் பொது மக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை எனவும்சென்னை வானியல் மன்றத்தின் பொதுச் செயலாளர் உதயன் பத்திரிக்கையாளர் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
source https://news7tamil.live/festival-of-stars-started-in-chennai-in-memory-of-galileo.html